dc.description.abstract |
இலங்கையின் உலர்வலயப் பரப்பினைப் பொறுத்தவரையில் அதன் நீர்வளம் தொடர்பான ஆய்வுகள் பாரியளவிலான முக்கியத்துவத்தினைப்பெற்று வருகின்றன. விவசாயம், வீட்டுப் பாவனை போன்ற பல நோக்கங்களிற்கான நீர்த்தேவையானது பல தசாப்தங்களாக அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. இவ்வாய்வுக்கட்டுரையானது மிகப்பொரிய ஆற்று வடிநிலமாக விளங்கும் கனகராயன் ஆற்று வடிநிலமானது வன்னிப்பிரதேச அபிவிருத்தியில் எவ்வளவு முக்கியத்துவமுடையதாகக் காணப்படுகின்றது என்பதனை அடிப்படையாகக் கொண்டுள்ளது. 90Km நீளமான இவ் ஆறானது சேமமடுக்குளத்தில் உற்பத்தியாகி வடக்கு நோக்கி ஓடி தட்டுவன்கொட்டி, ஊரியான் பகுதியை அண்டிய ஆனையிறவு கிழக்கு கடனீரேரியில் சங்கமிக்கின்றது. இதன் நீரேந்து பரப்பு 906 சதுரKm ஆகும். இவ் ஆய்வானது பின்வரும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. கனகராயன் ஆற்றுவடிநிலம் தன்னகத்தே கொண்டிருக்கும் வளவாய்ப்புக்களை இனங்காணுதலும், விருத்திக்கு தடையாக உள்ள காரணிகளை கண்டறிந்து அவற்றினை அகற்றுவதற்கான வழிமுறைகளை காணலும். வன்னிப்பிரதேச விவசாய நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக இவ் ஆற்று வடிநிலம் காணப்படுவதனால் நிகழ்காலத்தடைகளைக் களைந்து எதிர்கால விருத்திக்கான வாய்ப்புக்களை ஆராய்ந்து இன்றைய காலகட்டத்தில் இவ்வடிநிலம் சார்ந்த திட்டமிடுதலில் புதிய ஆலோசனைகளை வழங்குதல். ஆய்வுப் பிரதேசத்தில் காணப்பட்ட 823 குடும்பங்களில் 250 குடும்பங்களுக்கு (30%) எழுமாற்று ரீதியாக வினாக்கொத்துகள் வழங்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டன. மற்றும் நேரடி அவதானத்துடன் தரவுகள் பெறப்பட்டுள்ளன. இதுமட்டுமன்றி செவ்வி காணுதல், கலந்துரையாடல் போன்ற முறைகள் மூலமும் தரவுகள் சேகரிக்கப்பட்டது. இவ் வாய்விற்காக இரண்டாம் நிலைத் தரவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ் ஆய்விற்காக பெறப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்கான விபரண ரீதியான புள்ளிவிபர நுட்பமும் (Descriptive statistics) அனுமான புள்ளிவிபர நுட்பமும் (Inferential statistics) பயன்படுத்தப்பட்டது. ஆய்வுப் பிரதேசத்தில் காணப்படும் விவசாய நிலப்பயன்பாடுகள், பொருளாதார நிலைமைகள் போன்றவற்றிற்கு வீதம் கணிக்கப்பட்டுள்ளது. இதனைவிட லோறன்ஸ் வளையி (Lorenz's Curve) Weaver's இன் சேர்மானச் சுட்டிக் கணிப்பீடுகள், கினிக் குணகக் (Gini Coefficient) கணிப்பீடுகள், கைவர்க்கப்பரிசோதனை (The chisquared test - X2) முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. |
en_US |