Abstract:
புவி மேற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு நீர் நிலைகளினால் மூடப்பட்டுள்ளது. நீர் நிலைகள் என்பது நீர் ஓடுகின்ற, தேங்குகின்ற இடங்களைக் குறிக்கின்றது. அவற்றுள் ஆறு(நதி), குளம், பொய்கை, மழை, கடல், நீர்வீழ்ச்சி போன்றன முக்கியமானவையாகும். நீர்நிலைகள் பற்றிய ஆய்வுகள் பல்வேறு நூல்களிலும் காணப்பட்டாலும் இக்கட்டுரையானது திருமுறைகளில் நீர்நிலைகள் பற்றிய கருத்துக்களை ஆராய்வதாகவே உள்ளது. இவ்வாய்வானது முதலாம், இரண்டாம் நிலைத்தரவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு விபரணரீதியான ஆய்வாகவே உள்ளது. இவ்வாய்வுடன் தொடர்பான பல்வேறு வகையான இலக்கிய மீளாய்வுகள் ஆய்வுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறாக சம்பந்தரின் திருமுறைகளிலே ஆலயங்களில் பிரசித்திபெற்ற ஆறு, அருவி, குளம், பொய்கை, தீர்த்தம், கடல் போன்ற நீர்நிலைகள் பற்றிய கருத்துக்கள் பவ்வேறு நிலைகளில் கூறப்பட்டுள்ளதை ஆய்வின் மூலம் அறியமுடிந்துள்ளது.