dc.description.abstract |
இந்திய மெய்யில் சிந்தனையானது சமயத்துடன் பின்னிப்பிணைந்ததாகக் காணப்பட்டாலும்சமகால இந்திய மெய்யிலானது தனது பாரம்பரியத்தில் இருந்து விடுபடாமலும் அதே நேரம் காலச் சூழலின் தேவைக்கேற்ற வகையிலும் சமூக சீர்திருத்த சிந்தனைகளை முன்வைத்துள்ளன. இவ் ஆய்வின் நோக்கமானது சமூக சீர்திருத்த சிந்தனைகளில் பிரதானமாகக் காணப்படும் சமூக ஒருமைப்பாட்டினை ஆராய்வதாக அமைகிறது. இவ்வாய்விற்கு பண்புசார் நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது. இங்கு சமகால இந்திய மெய்யியல் தொடர்பான நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள், இணையத்தள தகவல்கள் என்பன இரண்டாம் நிலைத்தரவுகளாக காணப்படுகின்றன. இங்கு பாரம்பபரிய இந்திய மெய்யியல் சிந்தனைகளையும் சமகால இந்திய மெய்யியல் சிந்தனைகளையும் வரலாற்று ரீதியாக ஆராய்கின்ற போது வரவாற்று முறையியலும் இங்கு காணப்படுகின்ற சமூக ஒருமைப்பாடன சிந்தனைகளை பகுப்பாய்வு செய்கின்ற வகையில் பகுப்பாய்வு முறையிலும், அக் கருத்தியல்களை வெளிக்கொணரும் வகையில் விபரண முறையியலும் இங்கு ஆய்வு முறையியல்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆய்வு முடிவாக சமகால இந்திய மெய்யியல் பௌதீக அதீதச் சிந்தனைகளுடன் மட்டும் நின்றுவிடாது நடைமுறைவாழ்வியலுக்குப் பொருந்தக் கூடிய வகையில் சமுதாய ஒருமைப்பாடு, தொடர்பான சமூக சீர்திருத்தச் சிந்தனைகளையும் கொண்டு கட்டியெழுப்பப்படுகிறது |
en_US |