Abstract:
நவீன இந்தியாவில் ராஜாராம் மோகன் ரோய் மற்றும் சேர் செய்யித் அஹ்மத் கான் ஆகியோரின் வாழ்வும் சிந்தனையும் தற்போதைய இந்திய சந்ததியின் வெற்றிக்கு தாக்கம் செலுத்துவதாகவும் வாழ்வினை நகர்திச் செல்வதற்கும் அடிப்படையாகின்றது.
இந்திய சமூகம் ஓர் பன்மைத்துவ சமூகமாகும். குறிப்பாக இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பல சமய இன மதங்கள் வாழும் சமூகமாகும். இந்த பின்னணியில் நவீனத்துவ சிந்தனைகளையும் சமய சமூக கல்விசார் சீர்திருத்தங்களையும் மேற்கொள்ளும் போது பல சவால்கள் எழுவது இயல்பு. ராஜாராம் மோகன் ரோய் மற்றும் சேர் செய்யித் அஹ்மத் கான் போன்றவர்கள் இப்பிரச்சினைகளை எவ்வாறு கையாண்டார்கள் என்றும் அப்போது முன்வைக்கப்பட்ட சிந்தனைகளும் செயற்பாடுகளும் என்ன என்பது பற்றி ஒப்பீட்டு ரீதியிலும் இதன் மூலம் நவீன உலகுகிற்கும் இலங்கை போன்ற அதன் அயல் நாடுகளுக்கும் அவர்களால் முன்வைக்கப்பட்ட செய்தி என்ன என்பது பற்றியும் இங்கு ஆராயப்படுகிறது. ராஜாராம் மோகன் ரோய் மற்றும் சேர் செய்யித் அஹ்மத் கான் ஆகியோரின் சமய , சமூக,கல்வி ரீதியான சீர்திருத்த சிந்தனைகளை நவீன இந்திய சந்ததியின் வெற்றிக்கும் இலங்கை போன்ற அயல்நாடுகளின் வெற்றிக்கும் தாக்கம் செலுத்துகிறது என்கின்ற கருதுகோளினை அடிப்படையாகக் கொண்டு இவ் ஆய்வு நகர்த்திச் செல்லப்படுகிறது. இவ் இருவருடைய சமய, சமூக, கல்வி தொடர்பான சீர்திருத்த சிந்தனைகளிடைய காணப்படும் ஒப்பீட்டு தன்மையினை ஆராய்வதுடன் 19ம் நூற்றாண்டில் இந்திய சூழலில் அவர்கள் முன்வைத்த கருத்துக்களும் சிந்தனைகளும் சமகால பிரச்சினைகளையும் இன சமூக மோதல்களையும் தீர்ப்பதற்கு உதவும் விதத்தினை வெளிக் கொணர்தவதனையும் பிரதான நோக்கமாகக் கொண்டு காணப்படுகின்றது. இங்கு ஆய்வு முறையியல்களாக வரலாற்று ஆய்வு, பகுப்பாய்வு, ஒப்பீட்டாய்வு,விபரண ஆய்வு போன்ற ஆய்வு முறையியல்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவ் ஆய்வுக்கு தேவையான தரவுகள் இரண்டாம் நிலைதரவுகள் ஊடாக திரட்டப்பட்டு பண்பளவு ரீதியாக ஆய்வு செய்யப்படுகின்றது.