DSpace Repository

பொருளாதார நடவடிக்கைகளில் நுகர்வுக்கான கேள்வியின் வகிபங்கு (கிளிநொச்சி மாவட்டத்தின் நகரப்பகுதியை மையமாகக் கொண்ட ஒரு சிறப்பாய்வு)

Show simple item record

dc.contributor.author Mohan, S.
dc.contributor.author Ravishankar, V.
dc.date.accessioned 2022-01-07T09:34:04Z
dc.date.accessioned 2022-06-27T05:14:07Z
dc.date.available 2022-01-07T09:34:04Z
dc.date.available 2022-06-27T05:14:07Z
dc.date.issued 2017
dc.identifier.issn 2536-8869
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4906
dc.description.abstract இன்றைய உலகப் பொருளாதாரங்களில் நுகர்வுக்கான கேள்வி என்பது மிக முக்கியமானதொன்றாகக் காணப்படுகின்றது. மனித நடவடிக்கைகளின் உயர் வாழ்விற்குத் தேவையானதொரு விடயமாக நுகர்வு என்பது பேசப்பட்டு வருகின்றது. வருமானம் பூச்சியமாக இருக்கின்ற சந்தர்ப்பத்திலும் தனி மனிதனால் நுகர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது இயல்பானதே. அந்த வகையில், ''பொருளாதார நடவடிக்கைகளில் நுகர்வுக்கான கேள்வியின் வகிபங்கு'' என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சார்ந்த மாறியாக பொருளாதார நடவடிக்கையும், சாராத மாறியாக நுகர்வுக்கான கேள்வி என்ற மாறியும் காணப்படுகின்றது. ஆய்வுப்பிரதேசமாக இலங்கையின் வடமாகாணத்தின் மத்தியில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்டமே ஆய்வுப்பிரதேசமாகும். இங்கு பரந்தன் தொடக்கம் இரணைமடு வரையான ஏ9 வீதிக்கு இரு மருங்கிலும் உள்ள நிலப்பகுதியே ஆய்விற்கென தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஆய்வின் பிரதான நோக்கமாக பொருளாதார செயற்பாடுகளில் நுகர்வுக்கான கேள்வியின் பங்கினை இனங்காணல் என்பதும், துணை நோக்கங்களாக அண்மைக் காலங்களில் நுகர்வுக்கான கேள்வியின் போக்கினை அடையாளங் காணல், பொருளாதார அபிவிருத்தியில் நுகர்வுக்கான கேள்வியின் வகிபாகத்தினை இனங்காணல்,எதிர்காலத்தில் நுகர்வுக்கான கேள்வியின் போக்கினை கண்டறிதல், நுகர்வுக்கான கேள்வியில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளை இனங்காணல் போன்றனவும் காணப்படுகின்றன. அத்துடன் ஆய்வின் கருதுகோளாக ஆய்வுப்பிரதேசத்தின் பொருளாதார செயற்பாடுகளிற்கும், நுகர்வுக்கான கேள்விக்கும் நேரான தொடர்பு காணப்படுகின்றது என்பதும் காணப்படுகின்றது. அத்துடன் தரவுகளை சேகரிக்கின்ற போது பரந்தன் தொடக்கம் இரணைமடு வரையான ஏ9 வீக்கு இரு மருங்கிலும் உள்ள நிலப்பகுதியில் குடியிருக்கின்ற மக்களிடம் வினாக்கொத்து வழங்கப்பட்டு தரவுகள் பெறப்பட்டுள்ளன.வினாக்கொத்தானது எளிய எழுமாற்று மாதிரி முறையிலேயே வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஆய்வாளனினால் தெரிவு செய்யப்பட்ட பிரதேசத்தில் எழுமாற்று அடிப்படையில் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு வினாக்கொத்தானது வழங்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இங்கு எழுமாற்று அடிப்படையில் 50 பேர் தெரிவு செய்யப்பட்டு ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. தரவுகள் முதலாம் நிலை தரவு மற்றும் இரண்டாம் நிலை மூலங்களில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ளன. முதலாம் நிலை தரவு மூலங்களாக வினாக்கொத்து, நேர்காணல் என்பன ஆய்விற்கென தெரிவு செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் நிலை தரவுகள் என்கின்ற போது கிளிநொச்சி மாவட்டச் செயலக அறிக்கை பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், பொருளாதார அபிவிருத்தி மற்றும் நுகர்வுக்கான கேள்வி சார்பான நூல்கள், இணையத்தள கட்டுரைகள் என்பனவும். en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.title பொருளாதார நடவடிக்கைகளில் நுகர்வுக்கான கேள்வியின் வகிபங்கு (கிளிநொச்சி மாவட்டத்தின் நகரப்பகுதியை மையமாகக் கொண்ட ஒரு சிறப்பாய்வு) en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record