DSpace Repository

திருக்குறள் கூறிநிற்கும் ஊடக அறம்

Show simple item record

dc.contributor.author Poongulaly, S.
dc.date.accessioned 2022-01-05T02:23:31Z
dc.date.accessioned 2022-06-27T07:28:08Z
dc.date.available 2022-01-05T02:23:31Z
dc.date.available 2022-06-27T07:28:08Z
dc.date.issued 2019
dc.identifier.isbn 978-81-909877-5-2
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4849
dc.description.abstract திருக்குறளில் கூறப்பட்ட அனைத்து நெறிமுறைகளும் கருத்துக்களும் அக்காலத்தோடு கருதிச் சொல்லப்பட்டாலும் அது எக்காலத்துக்கும் எந்த நாட்டுக்கும் எந்தச் சூழலுக்கும் பொருந்தக்கூடியதாக அமைகின்றது. ஊடகத்தில் அறம் என்பது மிகவும் அவசியமாக பின்பற்றப்பட வேண்டியதொன்றாகும். திருக்குறள் மூன்று பால்களினால் இணைக்கப்பட்டதாகும். அது அறத்துப்பால்> பொருட்பால்> காமத்துப்பால் என்பனவாகும். வாழ்வில் அறத்துக்கு வழங்கப்பட வேண்டிய முக்கியத்துவத்தினை உணர்ந்து அறப்பாலுக்கு ஓர் ஆழமான முக்கியத்துவத்தினை கொடுத்துள்ளார் வள்ளுவர். அறத்துப்பால் நான்கு இயல்களைக் கொண்டு அமைவதோடு 38 அதிகாரங்களாக பிரித்து நோக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது பொய்யாமொழிப் புலவர் கூறிநிற்கும் அறமானது எவ்வாறு ஊடக அறத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றது என்பதினை கண்டறிதலினை ஆய்வு நோக்கமாகக் கொண்டு அமைகின்றது. இந்த ஆய்வின் எல்லையாக அறத்துப்பாலில் காணப்படும் முக்கியமான அதிகாரங்கள் மாத்திரம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அறத்துப்பாலில் குறிப்பிட்ட அறநெறிக் கொள்கைகள் வாழ்வியல் விழுமியங்கள்> தத்துவங்கள்> போன்றவற்றினை அடிப்படையாகக் கொண்டு அமைவதினால் இவ்வாய்வு உள்ளடக்கப் பகுப்பாய்வு முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் கருதுகோள் என்று நோக்கும் போது> திருக்குறள் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பாகப் பேசியுள்ளது. அவற்றுள் அறத்துப்பாலில் உள்ள விடயங்கள் ஊடக அறம் பேணப்படுவதற்கு துணைபுரிகின்றன என்பதே ஆகும். தற்காலத்தில் ஊடக அறம்> சட்டம்> கொள்கை> கோட்பாடு> எனப் பல்வேறு சட்ட திட்டங்கள் தோற்றம் கண்டாலும் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் கூறிய அறநெறிக் கொள்கைகள் தற்காலங்களில் ஊடகம் நேர்த்தியாகப் பயணிக்க துணைபுரிகின்றன. இந்த ஆய்வின் மூலாதாரங்களாக அறத்துப்பாலில் உள்ள 36 அதிகாரங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட சில அதிகாரங்கள் அமைகின்றன. மேலும் இரண்டாம் நிலைத்தரவுகளாக ஆய்வுப் பொருண்மையோடு தொடர்புடைய நூல்கள்> ஆய்வுக் கட்டுரைகள்> ஆய்வு நூல்கள்> சஞ்சிகைகள்> பத்திரிகைகள்> போன்றன அமைகின்றன. எதிர்காலத்தில் புதிய புதிய நுட்பங்கள்> சட்டங்கள்> மற்றும் நீதிநூல்கள் தோன்றினாலும் திருக்குறள் எக்காலத்துக்கும் எத்துறைக்கும் பொருத்தமான நூலாகவே அமையும் என்பதோடு இது ஊடக அறம் பின்பற்றப்பட அதிகளவில் துணைபுரியும் நூலாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. en_US
dc.language.iso other en_US
dc.subject திருவள்;ளுவர் en_US
dc.subject ஊடக அறம் en_US
dc.subject அறத்துப்பால் en_US
dc.subject இலக்கியம் en_US
dc.title திருக்குறள் கூறிநிற்கும் ஊடக அறம் en_US
dc.type Book en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record