Abstract:
ஈழத்தமிழர்கள் மிகவும் இறுக்கமான பண்பாட்டுப் பாரம்பரியங்களுடன்
வாழ்ந்தவர்கள். இவர்கள் புலம்பெயர்ந்து புதிய புதிய
பண்பாட்டுச் சூழல்களில் குடியேறிய போது புதிய சுதந்திரமான சூழல்
இவர்களைக் கவர்கின்றது. இதனால் தமது பண்பாட்டுக்கு ஒவ்வாத
புதியவர்களுடன் தமது திருமணஉறவுகளைக்கூட ஏற்படுத்திக்கொள்கின்றனர்.
எனினும் காலப்போக்கில் வேறுபட்டபண்பாடுகள் இரண்டும் முரண்படும் போது
இவர்களின் குடும்ப வாழ்வில் சிக்கல்கள் உருவாகின்றன. இதனைப் புலம்பெயர்
ஆய்வுகளினூடாக இந்த ஆய்வு தேடுகின்றன.