dc.description.abstract |
இலங்கையில் தனித்துவமான வரலாற்றினைக் கொண்ட பிராந்தியங்களில் யாழ்ப்பாணக் குடாநாடும் ஒன்றாகும். 16ஆம் நூற்றாண்டின் பின்பாக போர்த்தக்கேயர்கள், டச்சக்காரர்கள், ஆங்கிலேயர்கள் போன்ற ஐரோப்பிய இனத்தவர்களின் ஆதிக்கத்தின் கீழ் தொடர்ச்சியாக இலங்கை இருந்தது மட்டுமன்றி யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் அவர்களுக்கு அடிமைப்படுத்தப்பட்டுக் கிடந்ததன் பின்னணியில் இப்பகுதிகள் ஐரோப்பியர்களது பண்பாட்டச் செல்வாக்கிற்கு உட்பட்ட பிராந்தியங்களாக மாறிக் கொண்டன. அந்த வகையில் இந்துமதத்திலும் இந்துப்பண்பாட்டிலும் ஊறிப்போயிருந்த யாழ்ப்பாண மக்களுக்கு கல்வியினையும், சலுகைகளையும் சில சந்தர்ப்பங்களில் பலாத்காரத்தினைப் பிரயோகிப்பதன் வாயிலாகவும் தங்களது அரசியல் நடவடிக்கையினை மட்டுமன்றிக் கூடவே யாழ்ப்பாணக் குடாநாட்டில் டச்சுக்காரர்கள் தங்களது பண்பாட்டுச் செல்வாக்கினையும் ஏற்படுத்தினர். இத்தகைய பண்பாட்டுச் செல்வாக்கானது மதம், மொழி, இலக்கியம், கலை, வாழ்க்கைமுறை போன்ற வடிவங்களில் ஏற்படுத்தப்பட்டன. இவற்றில் சில அம்சங்கள் பின்னர் வந்த ஆங்கிலேய ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்ட நிலையில் காணப்பட பல அம்சங்கள் இன்றுவரை யாழ்ப்பாணக் குடாநாட்டில் இவர்களின் ஆட்சியின் முக்கியத்துவத்தினையும் சிறப்பினையும் எடுத்துக்கூறுகின்ற வகையில் தலைநிமிர்ந்து காணப்படுகின்றன. அதாவது போர்த்துகேயர்களது பண்பாட்டு அம்சங்களை அழித்;தோ அல்லது அவர்களது வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்தியோ டச்சுக்காரர்கள் அவற்றில் தங்களது செல்வாக்கினை இலங்கையில் நிலைநாட்டியது போன்று பின்வந்த ஆங்கிலேயர்கள் டச்சுக்காரர்களைப் போன்று மோசமாக நடந்து கொள்ளாமையின் விளைவாகவே பல டச்சுக்காரர்களின் பண்பாட்டு எச்சங்கள் அவர்களின் செல்வாக்கினை யாழ்ப்பாணக் குடாநாட்டில் இன்றுவரை இனங்காட்டி நிற்கின்றன எனலாம். யாழ்ப்பாணக் குடாநாட்டில் டச்சுக்காரர்களின் ஆட்சிக்காலப்பகுதி தொடர்பாகப் பல்வேறு வகையான தகவல்கள் கிடைக்கப்பட்டு வந்தாலும் அவை ஒருங்கிணைக்கப்பட்டு அக்காலப் பகுதியில் ஏற்பட்ட பண்பாட்டுச் செல்வாக்கு தொடர்பான விடயங்கள் ஆழமாக ஆராயப்படவில்லை. அத்துடன் டச்சுக்காரர்கள் கால பண்பாட்டுச் செல்வாக்குத் தொடர்பாகவும் அவற்றின் முக்கியத்துவம் தொடர்பாகவும் இக்கட்டுரை ஆராய்கின்றது. டச்சுக்காரர்களின் ஆட்சியில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஏற்பட்ட புதிய பண்பாட்டம்சங்களை கண்டறிவதும் அவை எந்தளவுக்குப் பாரம்பரிய யாழ்ப்பாணப் பண்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தின? அவை தற்காலத்திலும் தொடர்கின்றனவா? என்பதனை ஆராய்வதும் அவற்றினை ஆவணப்படுத்துவதும் சமுதாயத்தின் கட்டாய தேவையுமாகும். எனவே இத்தகைய நோக்கங்களை ஓரளவிற்காவது நிறைவேற்றுவதனை இவ்வாய்வு நோக்கமாகக் கொண்டுள்ளதெனலாம். யாழ்ப்பாணக் குடாநாட்டில் டச்சுக்காரர்கள் கால பண்பாட்டுச் செல்வாக்குத் தொடர்பாகத் தனித்து எவரும் தற்காலம் வரை ஆய்வினை மேற்கொண்டதாகத் தெரியவில்லை. அதேநேரத்தில் டச்சுக்காரர்கள் கால யாழ்ப்பாணத்தினைப் பற்றிப் பல்வேறு நூல்களும் கட்டுரைகளும் ஆராய்ச்சியாளர்களினால் எழுதப்பட்டு வெளிவந்துள்ளன என்பதனையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவற்றிலும் கூட யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பண்பாடு பற்றிய செய்திகள் விரிவாக காணப்படவில்லையென்றே கூறுதல் வேண்டும். குறிப்பாக P.நு.Pநைசளை எழுதிய ஊநலடழn யனெ வாந ர்ழடடயனெநசள (1658-1796), மு.ஆ.னுநஇளுடைஎய ரூ று.பு.ஆஇ டீநரஅநச ஆகியோர்கள் எழுதிய ஐடடரளவசயவழைளெ யனெ ஏநைறள ழக னுரவஉh ஊநலடழn (1602-1796)இ மு.ஆ.னுந. ளுடைஎய எழுதிய யு ர்ளைவழசல ழக ளுசi டுயமெயஇ ளு.யுசயளயசயவயெஅ எழுதிய வுhந னுரவஉh Pழறநச in ஊநலடழn (1658-1687)இ ளு.பு.Pநசநசய எழுதிய ர்ளைவழசல ழக ஊநலடழnஇ செ.கிருஸ்ணராஜாவின் இலங்கை வரலாறு, மற்றும் பேராசிரியர்.சி.பத்மநாதன், கலாநிதி மு.குணசிங்கம் போன்றவர்களது நூல்களும் கட்டுரைகளும் கூட அவர்களது பரந்த ஆய்வில் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள்ளேயே யாழ்ப்பாணக் குடாநாட்டில் டச்சுக்காரர்கள் கால பண்பாட்டுச் செல்வாக்குச் சம்பந்தமான விடங்களைக் கூறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆய்வில் வரலாற்று ரீதியான அணுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது. சமகாலத்தில் மதப் பரப்புரைக்காக வந்த புரட்டஸ்தாந்து குருமார்கள் எழுதிய குறிப்புக்கள், நெதர்லாந்து சென்று யாழ்ப்பாணம் தொடர்பான சான்றுகளைச் சேகரித்து எழுதப்பட்ட நூல்கள் மற்றும் கட்டுரைகள், டச்சுக்காரர்கள் கால நினைவுச்சின்னங்கள், அழிபாடுகள் போன்றன பிரதான முதல்தர ஆதாரங்களாக ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. மேலும் ஆய்வுக்குத் தேவையான இரண்டாந்தரச் சான்றுகள் வரிசையில் டச்சுக்காரர்களது காலம் தொடர்பாக பிற்பட்ட காலங்களில் எழுதப்பட்ட நூல்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், இணையத்திலிருந்து பெறப்பட்ட தரவுகள், இத்துறையில் ஈடுபாடு கொண்ட அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்றவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் என்பன இக்கட்டுரைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. |
en_US |