Abstract:
ஆய்வுச்சுருக்கம்: மலையாளப் புகையிலை வியாபாரமானது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் மத்திய பகுதி வரை யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களின் பொருளாதாரத்திலே பாரிய தாக்கத்தினை உண்டாக்கிய ஒரு வியாபார நடவடிக்கையாகக் காணப்படுகின்றது. இவ்வியாபார நடவடிக்கையின் தோற்றம், அதன் போக்கு, அதன் வீழ்ச்சி போன்ற விடங்களைப் பெருமளவுக்கு அக்காலப்பகுதியில் வெளிவந்த ஆதாரங்களுடன் இங்கு ஆராயப்படுகின்றது.