Abstract:
போர்த்துக்கேயரைத் தொடர்ந்து 1796 இல் ஆங்கிலேயரது செல்வாக்கானது இலங்கையில் ஏற்படும் வரை வடஇலங்கை உள்ளிட்ட இலங்கையின் கரையோர பகுதிகள் யாவும் ஒல்லாந்தரது வசமே காணப்பட்டிருந்தது. இக் காலப்பகுதியில் வடஇலங்கையின் பல பகுதிகளிலும் இஸ்லாமியர்களது குடியேற்றங்கள் காணப்பட்டன. உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கைகள் அனேகமாக அவர்களிடமே காணப்பட்டிருந்தது. முத்துக் குளித்தல்இ யானை வர்த்தகம்இ புகையிலை வர்த்தகம்இ துணி வர்த்தகம் போன்றன இவற்றில் குறிப்பிடத்தக்கன. இதன் மூலமாக அதிகளவான வருவாயினையும் இவர்கள் பெற்றனர். இவற்றினை அவதானித்த ஒல்லாந்தர் இஸ்லாமியர்களது பொருளாதார நடவடிக்கைகளைக் கடடுப்படுத்துகின்ற முயற்சியில் இறங்கினர். இவர்கள் செய்து வந்த தொழில்களில் ஒல்லாந்தர் கைவைக்க ஆரம்பித்தனர். முஸ்ஸிம்கள் அதுவரை காலமும் வரி வசூலித்து வந்த நிலையினை இல்லாமல் செய்தனர். எத்தகைய தொடர்புகளும் இஸ்லாமியர்களுடன் வைத்திருக்கக் கூடாதென ஒல்லாந்தருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான ஒல்லாந்தரது இஸ்லாமியருக்கு எதிரான பொருளாதாரக் கொள்கையினால் அவர்கள் படிப்படியாக வடஇலங்கையின் பொருளாதாரத்தில் அதுவரை காலமும் பெற்றிருந்த செல்வாக்கினை இழக்க நேரிட்ட போதும் அவர்களது பொருளாதார நடவடிக்கைகளை முற்றாக ஒல்லாந்தரால் அழிக்க முடியவில்லையென்பதே நிஜம். பொதுவாக வரலாற்று அணுகுமுறையின் அடிப்படையில் விவரண ஆய்வாக அமைந்த இவ்வாய்விற்கு தேவையான தரவுகள் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை என்ற அடிப்படையில் பெறப்பட்டுள்ளன. ஒல்லாந்தர்கால அரசாங்க அறிக்கைகள், ஆவணங்கள் முதல்நிலைத் தரவுகள வரிசையில் பிரதான இடத்தினைப்பெற பிற்பட்ட காலத்திற்குரிய நூல்கள்இ கட்டுரைகள்இ பத்திரிகைகள்இ இணையத்திலிருந்து பெறப்பட்ட தரவுகள் என்பன இரண்டாம் நிலைத் தரவுகள் வரிசையில் காணப்படுகின்றன. வடஇலங்கையில் ஒல்லாந்தர் கால இஸ்லாமிய மக்களது பொருளாதார நடவடிக்கைகள், ஒல்லாந்தர் அவற்றினைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள்இ அதனால் ஏற்பட்ட விளைவுகளை வெளிப்படுத்துதல் போன்றவை ஆய்வினது பிரதான நோக்கங்களாக காணப்படுகின்றன. ஒல்லாந்தரது காலத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக எடுத்த பொருளாதார நடவடிக்கைகளினால் இஸ்லாமியரது பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்ட அதேநேரத்தில் அது முற்றாக அழிக்கப்படவில்லையென்பது ஆய்வின் பிரதான கருதுகோளாகவும் உள்ளது. மேற்குறித்த விடயமாக முன்னைய ஆய்வுகள் எவையும் குறித்த விடயமாக மேற்கொள்ளப்படவில்லையென்பது கவனிக்கத்தக்கது.