DSpace Repository

யாழ்ப்பாணத்துப் பத்திரிகை வளர்ச்சியில் அமெரிக்க மிசனரியினது வகிபாகம் - ஓர் பார்வை

Show simple item record

dc.contributor.author Arunthavarajah, K.
dc.contributor.author Jegatheswaran, K.
dc.date.accessioned 2021-12-31T03:35:58Z
dc.date.accessioned 2022-06-27T07:09:04Z
dc.date.available 2021-12-31T03:35:58Z
dc.date.available 2022-06-27T07:09:04Z
dc.date.issued 2015
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4745
dc.description.abstract புரட்டஸ்தாந்து மதத்தைப் பரப்பும் நோக்குடன் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த அமெரிக்க மிஷனரியினர் தமது அத்தகைய நோக்கத்தினை முன்னெடுப்பதற்கான கருவிகளாகிய கல்வி, வைத்தியம் போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து தமது பணிகளை மேலும் விரிவுபடுத்தவும், இலகுபடுத்தவும் யாழ்ப்பாணத்திற்கு முதன் முதல் அச்சியந்திரத்தை அறிமுகப்படுத்தி பதிப்புப்பணியை இவர்கள் ஆரம்பித்து வைத்தனர். தமது பதிப்பு பணியின் மூலம் துண்டுப்பிரசுரங்கள், நூல்கள் என்பனவற்றை வெளியிட்டு வந்த இவர்கள் காலப்போக்கில் தமது நோக்கத்தை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் பத்திரிகை ஒன்றையும் வெளியிட்டனர். ஐரோப்பியர்களான போர்த்துக்கேயர் வருகையைத்தொடர்ந்து கடதாசி அறிமுகமானாலும் அது அவர்களது நிர்வாக நடவடிக்கைகளுக்கே பயன்பட்டது. அவை பெருமளவு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதே நிலை தான் அடுத்து வந்த ஒல்லாந்தர் காலத்திலும் தொடாந்து வந்தது. இவ்வாறான சூழ்நிலையிலேயே ஆங்கிலேயர் காலத்தில் வருகை தந்த அமெரிக்க மிஷனரியினரால் வெளியிடப்பட்ட உதயதாரகை என்ற பத்திரிகையினது வெளியீடானது யாழ்ப்பாண சமுதாயத்தில் மாற்றங்கள் பலவற்றினை எற்படுத்தியிருந்ததுடன் அவர்கள் கொண்டிருந்த இலக்கினையும் நிறைவு செய்திருந்தது. அந்த வகையில் தொடர்பு சாதன ரீதியில் பத்திரிகைத்துறையை அறிமுகப்படுத்தியதானது யாழ்ப்பாணத்தில் பத்திரிகைக்கலாச்சாரம் ஒன்று தோற்றம் பெற்று யாழ்ப்பாணத்தவரை அறிவியல் ரீதியில் வளர்த்து சென்றதெனலாம். இவ்வகையில் அமெரிக்க மிஷனரியினரது வருகையும் அவர்கள் பத்திரிகை பணியும் யாழ்ப்பாண வரலாற்றில் சிறப்புமிக்க விடயங்களாக கருதப்படுகின்றது. ஆய்வினது நோக்கங்கள் பலவாறு காணப்படுகின்றன. அமெரிக்க மிஷனரியினது நடவடிக்கைகள், பத்திரிகை வெளிவந்த காலச்சூழல், சமகாலத்தில் அப்பத்திரிகை எதிர்நோக்கிய பிரச்சனைகள் அக்காலப்பகுதியில் அதனது நடவடிக்கைகள், அதன் வெற்றி தோல்விகள் போன்றவற்றினை ஆய்வு செய்வது ஆய்வினது பிரதானமான நோக்கங்களாகும். சமூக வரலாற்று அணுகு முறையின் அடிப்படையில் இவ்வாய்வு அமைந்துள்ளது. முதற்தர மற்றும் இரண்டாம்தர சான்றுகள் ஆய்விற்காக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. பெருமளவிற்கு உதயதாரகை மற்றும் சமகாலத்தில் வெளிவந்த பத்திரிகைள் முதற்தரச் சான்றுகளாக அமைந்துள்ளன. பிற்பட்;ட காலங்களில் முதற்தர ஆதாரங்களை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட நூல்கள,; சஞ்சிகைகள் மற்றும் நேர்காணல்கள் போன்றன இரண்டாம்தர ஆதாரங்களாக ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேற்கூறப்பட்ட தலைப்பில் நேரடியாக ஆய்வு முயற்சிகள் நடைபெறவில்லையாயினும் முரடயவாரபெய எழுதிய யு டீசநைக ழக வாந யுஅநசiஉயn ஊநலடழn ஆளைளழைn Pசநளளஇ இ.சிவகுருநாதன் எழுதிய இலங்கையில் தமிழ்ப்புதினப் பத்திரிகைகளின் வளர்ச்சி, கோப்பாய் சிவம் எழுதிய இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகளின் வளர்ச்சி, கோப்பாய் சிவம் எழுதிய இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள், ஆ.சிவநேசச்செல்வனின் ஈழநாட்டு தமிழ்ப் பத்திரிகைகளின் தோற்றமும் வளர்ச்சியும், எஸ்.ஜெபநேசன் எழுதிய இலங்கைத்தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷன், சி.டி.Nலுப்பிள்ளை எழுதிய அமெரிக்க இலங்கை மிஷன் சரித்திரம் போன்றன இதற்கு முன்னோடியாக அமைந்த ஆய்வுகளாக கொள்ளலாம். பத்திரிகைகள் என்பன அமெரிக்க மிசனரியினது வருகையுடன் அவர்களினால் யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னணியில் யாழ்ப்பாணச் சமூகத்தில் மாற்றங்கள் பலவற்றினை உண்டாக்கியது. சமுதாயத்தில் புரட்சியினை எதிர்பார்த்த நோக்கினையும் அவர்களால் வெளியிடப்பட்ட பத்திரிகையான உதயதாரகை நிறைவு செய்தது. en_US
dc.publisher International Conference on Contemporary Management (ICCM) – 2015 en_US
dc.subject அமெரிக்க மிஷன் en_US
dc.subject அச்சுப்பணிகள் en_US
dc.subject உதயதாரகை en_US
dc.subject பத்திரிகைப்போர் en_US
dc.title யாழ்ப்பாணத்துப் பத்திரிகை வளர்ச்சியில் அமெரிக்க மிசனரியினது வகிபாகம் - ஓர் பார்வை en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record