Abstract:
நீண்டதொரு வரலாற்றினைக் கொண்ட இலங்கையில் இனப்பிரச்சினையில் அதன் அயல் பிரதேசம் என்ற வகையில் தமிழகமும் அதனது ஆட்சியாளர்களும் பல்வேறு காலக்கட்டங்களில் நேரடியாகவே இவ்விடயத்தில் தமது தலையீட்டினை மேற்கொண்டு வந்துள்ளமை தெரிந்ததே. இத்தகைய வரிசையில் குறிப்பாக கருணாநிதிஇ எம்.ஜி.ஆர் இறுதியாக ஜெயலலிதா போன்ற தமிழக முதல்வர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் இவர்களில் ஜெயலலிதாவினைப் பொறுத்து அவர் முதல்வராக இருந்த சமயங்களில் இலங்கையின் இனப்பிரச்சினை பொறுத்து இரு வேறுபட்ட கொள்கையினைக் கடைப்பிடித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதாவது இலங்கையில் நடைபெற்றுவந்த உள்ளநாட்டு யுத்த காலப்பகுதியில் ஒரு கொள்கையும் யுத்தம் முடிவடைந்த காலத்திற்குப் பின்னராக மற்றொரு கொள்கையினையும் இலங்கையின் இனப்பிரச்pனை பொறுத்து இவர் கடைப்பிடித்து வந்தமையினை அவதானிக்க முடிகின்றது. அதாவது முதலாவது கொள்கையானது இலங்கைத் தமிழர் மீதான அனுதாபக்கொள்கை என்பது சற்று வினாவிற்குரியதாகவும் மற்றைய கொள்கை அவரை இலங்கைத் தமழிர் மீதான முழுநேர அனுதாபியாகவும் வெளிக்காட்டியது. இவ்வாறான இரு வேறுபட்ட கொள்கையானது இலங்கையின் இனப்பிரச்சினை பொறுத்து அவரால் கடைப்பிடிக்கப்பட்டு வந்தமைக்கு பல்வேறு காரணிகள் கூறப்பட்டிருந்தாலும் கூட தமிழகத்தில் அவரது அரசியல் காய்நகர்த்தலுக்கான ஒரு இராஜதந்திரச் செயற்பாடாகவே இதனைக் கருதலாம். அவ்வகையில் உள்நாட்டு யுத்த காலப்பகுதியில் அவரால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த கொள்கையானது இலங்கைத் தமிழர் போராட்ட சார்புக் கொள்கையாக அமையவில்லை. இவ்வாய்வானது வரலாற்றுத்துறை சார்ந்து காணப்படுவதுடன் பரந்துபட்டதாகவும் உள்ளது. மேலும் விவரண மற்றும் ஒப்பியலின் அடிப்படையில் அமைந்த ஆய்வாக அமைக்கப்பட்டுள்ள இவ்வாய்விற்குத் தேவையான முதல்நிலைத் தரவுகள் வரிசையில் நேர்காணல்கள், கலந்துரையாடல்கள், அவதானிப்பு, கட்சிகளது அறிக்கைகள் என்பனவும் இரண்டாம் நிலைத்தரவுகள் வரிசையில் நூல்கள், பிற்பட்ட காலத்தில் வெளிவந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணையத்திலிருந்து பெறப்பட்ட தரவுகள் என்பனவும் அடங்குகின்றன. உள்நாட்டு யுத்த காலப்பகுதியில் இலங்கையின் இனப்பிரச்சினை பொறுத்து இவர் கடைப்பிடித்தவந்த இத்தகையின் கொள்கையின் பிரதான இயல்புகளை வெளிப்படுத்தவது மற்றும் மேற்கூறப்பட்ட இவரது கொள்கை நிலைப்பாட்டுக்கான காரணங்களை ஆராய்தல் என்பன ஆய்வினது பிரதான நோக்கங்களாக உள்ளன. அரசியலில் இராஜதந்திரம் என்பது தேவைதான். ஆனால் இலங்கைத் தமிழ் மக்கள் விடயத்தில் இத்தகையதொரு அவரது மனப்பங்கானது கவலைக்குரியதே.