Abstract:
சும்ஸ்கிருத காவிய மரபில் சிறந்து விழங்குவன பஞ்கமஹாகாவியங்களாகும். அவற்றுள்
ஒன்றாக விளங்குவது சிசுபாலவதம் எனும் மஹாகாவியமாகும். மாகன் எனும் கவிஞனது படைப்பு
என்பதால் மகாகாவியம் என்றும் அழைக்கப்படும். இந்தியாவின் குஜராத்தேசத்தில் கி.பி. 8ம்
நூற்றாண்டளவில் வாழ்ந்த இவரது இலக்கியப்படைப்பானது உயர்ந்த தரமுடையது.
இந்தியப்பண்பாட்டின் பல்வேறு பரினாமங்களுக்குமான சாத்திரங்களை நன்கு அறிந்த
புலமையாளரான இவரது காவியம் இலகு சுருக்கங்களைக் கொண்டது. ஸ்ரீமத் பாகவத
புராணத்தில் கிருஷ்ணர் சிசுபாலனைக்கொன்ற கதையை சாரமாகக் கொண்ட இக்காவ்யத்தில ;
கவிஞனின் புலமை எடுத்துக்காட்டப்படுகின்றது. காளிதாசர், பாரவி,தண்டி ஆகிய மூன்று
புலவர்களிடமும் காணப்பட்ட உயர்ந்த பண ;புகளான உவமை, பொருட்பெருமை
(அர்த்தகௌரவம்), விழுமியசொற்களின் பொலிவு(பதலாலித்யம்) ஆகிய மூன்றும் நிறைந்த சிறந்த
பண ;பு மாகனிடத்தில் விளங்குவதனை காணமுடிகின்றது. சிறந்த வர்ணனைகளும் உயர்ந ;த
சாஸ்திர நுட்பங்களும் பாவவகைகளையும் தமது காவியத்தில் கையாண்டுள்ளார். இத்தகைய
சிறப்புடைய சிசுபாலவதத்தினை மூலமாகக் கொண்டு இலக்கிய விவரண ஆய்வுமுறையியல்
மூலமாக சம்ஸ்கிருத இலக்கியச் செழுமையை வெளிக்கொணர்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்