Abstract:
யாழ்ப்பாணத்து கோயில்களில் 1980களிலிருந்து வரையப்பட்டுவருகின்ற சுவரோவியங்களின் காட்சிப்பண்பினையும் அவை சார்ந்த வெகுசனப் பார்வையையும் அவற்றின் சமூக பண்பாட்டுப் பின்னணியையும் திரைவிலக்க இக்கட்டுரை முயல்கிறது. அலங்காரக் காட்டுருக்கள் புராண இதிகாசப் பாத்திரங்கள் புனிதத் தலங்கள் எனப் பல்வேறுபட்ட கருப்பொருட்கள் சித்தரிக்கப்பட்டள்ளன. இவை கோயில் சார்ந்து வழிபாட்டுக்குரியனவாகக் கருதப்படுகிறபோதிலும் விக்கிரவியல் சார் அடிப்படைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை. மேலும் இவற்றை வரைய சுவரோவிய உத்திமுறைகள் எதுவும் பயன்படுத்தப்படவும் இல்லை. ஆனால் இவை மரபு வழிவந்த சுவரோவியங்கள் என்றும் உயர்கலை வெளிப்பாடுகள் என்றும் விக்கிரகப்படங்கள் என்றும் இதன் படைப்பாளிகளாலும் பக்தர்களாலும் கேள்வி;க்கிடமில்லாமல் நம்பப்படுகின்றன. இவ்வாசிப்பு இவ்வேவியங்களை காட்சிப்பண்பை ஒப்பீட்டு முறையில் பாணியின் பகுப்பாய்வுசெய்வதோடு அவற்றை இந்தியாவில் சந்தையை நோக்கமாகக் கொண்டு படைக்கப்படும் கலண்டர் கலை அல்லது பசார் கலை என்பனவற்றின் உருப்பெருத்த சனரஞ்சக வடிவங்களாக இனங்காண்கிறது.