dc.description.sponsorship |
'நெசவு' எனும்போது கீழைத்தேயங்களில் பருத்தித்துணி பற்றிய எண்ணமே முதலில் எழுகின்றது. யாழ்ப்பாணத்திற்கும் பருத்திக்குமான தொடர்பினை இங்கு காணப்படும் பருத்தி அடைப்பு, பருத்திவேலி, பருத்தித்தீவு, பருத்தியோலை, பருத்திக்கலட்டி மற்றும் பண்டையகால பிரதான துறைமுக நகரங்களிலொன்றான பருத்தித்துறை ஆகிய இடங்களின் பெயர்களின் மூலம் அறியமுடிகின்றது. அத்தோடு டச்சு ஆவணங்கள் பலவற்றில் காரைதீவு, நெடுந்தீவு போன்றவிடங்களில் பருத்தி பயிரிடப்பட்டமை பற்றியும் குறிப்புகளுள்ளன. அத்தோடு பருத்திப் பயிரிடலுக்கான காலநிலையும் இங்கு பொருந்திப்போகின்றது ஆயினும் போதியளவு பருத்தியுற்பத்தி இடம்பெறாக்காலங்களில் இந்தியாவினின்று நூலினைப் பெற்றுக்கொண்டு நெசவினை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறான இலங்கையின் மற்றைய பாகங்களோடு ஒப்பிடுகையில் நீண்ட முற்பாரம்பரிய உடையதாக யாழ்ப்பாணத்தின் நெசவு காணப்பட்டாலும் இன்று முழுமையாக அரச கைத்தொழிற் திணைக்களத்தின் கல்வியூட்டலின ஓர் சிறுகூறாக இனம்காண்கின்ற நிலையில் இன்று ஓர் அருந்திப்போன பாரம்பரியத்தின் நினைவுச்சின்னமாகவே நோக்கக்கூடியதாகவுள்ளது. சுயம் அடையாளம் தேசியம் பற்றி ஆழமாகச் சிந்;திக்கும் ஓர் இனம் தமது மரபைத் தனித்துவத்தை அடையாளங்களைப் பற்றி மீள்வாசிப்புக்குட்படுத்தி புதுப்பித்துக் கொள்வதும் இன்றியமையாதது. அவ்வகையே அருந்திப்போன எமக்குரித்தான நெசவுப்பாரம்பரியத்தினைப் பற்றியும் அதன் அருந்தலுக்கான காரணங்களினை வாசிப்பதாகவே இவ்வாய்வு அமைகின்றது. |
en_US |