Abstract:
பதி பசு பாசம் என்ற முப்பெருள் உண்மையினை விளக்கும் சைவசித்தாந்தமானது பதியான கடவுள்கொள்கையை முன்வைக்கும் பொருட்டு தர்க்க நுட்பங்களை பயன்படுத்துகிறது. இந்த வகையில் முதன்மைக்குரிய பொருளானகடவுள் பற்றிய சிந்தனைகளை எவ்வகையான நுட்பங்களினூடாக சைவசித்தாந்தம் முன்வைக்கிறது என்பதனை ஆராய்வதே இவ்ஆய்வின் நோக்கமாக அமைகிறது.
இவ் ஆய்வில் பண்புசார் நுட்பமே பயன்படுத்தப்படுகிறது. ஆய்வு முறையியல்களாக பகுப்பாய்வு முறையியலும்விபரணமுறையியலும் பயன்படுத்தப்படுகிறது. இங்கு இரண்டாம் நிலைத் தரவுகள் மூலம் தகவல்கள் திரட்டப்படுகின்றன. இந்த வகையில் ஆய்வில் சிவஞான போதம் ரூபவ் சிவஞான சித்தியார் போன்ற மெய்கண்ட
சாஸ்திர நூல்களும் அவற்றின் உரை நூல்களும் மேலும் துணை நூல்களாக இவ் ஆய்வுக் கட்டுரையுடன் தொடர்புடைய
சைவசித்தாந்த நூல்களும் பயன்படுத்தப் படுகின்றன.
இந்த வகையில் இறைவன் பற்றிய சிந்தனைகளை முன்வைக்கும் பொருட்டு முதலில் இறைவனின் இருப்பு தர்க்க ரீதியில்
நிறுவப்படுவதுடன் இறைவனின் இயல்பும் வெளிப்படு;த்தப்படுத்தப்படுகிறது. இங்கு இறைவனை முதன்மைப் பொருளாகஎடுத்தாள்வதுடன் இறைவனை அடைதலே உயரிய இலக்காகவும் கருதப்படுகிறது.