Abstract:
பல்லவர் காலமானது பக்தி இயக்க காலம் எனக் கூறும் வகையில் பக்தி கருப்பொருளாகக் காணப்படுகிறது. இதற்கு இக் காலத்தில் தோற்றம் பெற்ற திருமுறைகளின் வகிபங்குபிரதானமாகக்காணப்படுகிறது. திருமுறைகள் பக்தியை மையப்படுத்தி அதனூடாக ஆன்ம விடுதலையை அடைவதை நோக்கமாககொண்டிருப்பதனை வெளிக்காட்டுவதுடன் பல்வேறான கலைகளின் வளச்சிக்கும் சமூக ஒருங்கிணைப்பிற்கும் பக்திமரபானது எவ்வாறு அடிநிலையாக அமைந்தது என்பதையும் ஒருங்கே வெளிப்படுத்துவதே இவ் ஆய்வின்நோக்கமாகும். இங்கு ஆய்வு முறையியல்களாக பன்னிரு திருமுறைகளில் காணப்படும் பாடல் வரிகள்
பண்புரீதியான முறையில் நோக்கப்பட்டு விபரணரீதியில் பகுப்பாய்வு செய்யப்பட்டள்ளது. பல்லவர்கால பக்தி மரபை ஆராயும் வகையில் வரலாற்று முறையியல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பக்தியினூடாக திருவருளை அடைவது
மட்டும் நோக்கமாகக்கொள்ளாது சாதிரூபவ் இனரூபவ் மொழிரூபவ் பால் பேதங்களும் களையப்பட்டு சமூக ஒருமைப்பாட்டிற்கும்
பக்தி வழிகோலுவதாக அமைகிறது. சாதாரண மானிட வாழ்வில் பேணப்படும் தாய்ரூபவ் தந்தைரூபவ் பக்தி என்பது
இறையருளுடன் மட்டும் தொடர்புறாது சாதாரண நடைமுறை வாழ்வியலின் எல்லா அம்சங்களுடனும் தொடர்புறும்
ஒன்றாகவும் காணப்படுகிறது.