Abstract:
மிருச்சகடிகம் (பொம்மை வண்டி) என்ற சூத்திரகரால் இயற்றப்பட்ட சம்ஸ்கிருத நாடகம்சமகால சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் ஒரு நாடகமாகும். நாடகவகை பத்தினுள் இது பிரகரணம் என்ற வகையைச் சேர்ந்தது. சூத்திரகரின் காலம் கி.பி மூன்நாம் நூற்றாண்டிற்கும் ஐந்தாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்நாடகம் மூலம் அக்கால மக்களின் சமநிலை, சமயம், இந்துச்சட்டம், நீதி பரிபாலனம், சமுதாய நம்பிக்கைகள், இசை, நடனம், பொழுது போக்கு போன்ற பல்வேறு அம்சங்களையும் அறிந்து கொள்ள முடியும்.