Abstract:
மஹாபாரதம் ஆதிபர்வத்தில் வரும் ஒரு பிரிவான சம்பவபர்வத்தில் வரும் சகுந்தலோபாக்கியானம் எனும் கிளைக்கதையை “அபிக்ஞான சாகுந்தலம்”என்னும் அழகிய நாடகமாக்கித் தந்தவர் காளிதாசர். கவிஞனொருவன் ஆக்கங்களில் அவனுக்கு முன்னர் வாழ்ந்த கவிகள் செலுத்தும் செல்வாக்குகணிசமானதாகும். கிளைவ்சன்சன் என்பாரிது பற்றிப் பின்வருமாறு கூறுகிறார். “யு pழநவ ளை டில யெவரசந ய pநைஉந ழக iவெநடடநஉவரயட யனெ நஅழவழையெட டிடழவவiபெ pயிநச. வுhந அழளவ pழறநசகரட ழக யடட iகெடரநnஉநள ளை வாயவ ழக நயசடநைச pழநவள. வுhந pழநவ hயள அரஉh ழக வாந pழநவசல ழக வாந pயளவ in hளை நயச.” (ஊடiஎந ளுயளெநnஇ 1947இ p.3) இ இக்கூற்றுக்கு காளிதாசர் தக்கத்தோர் எடுத்துக்;காட்டாகும். மஹாபாரதத்தில் வரும் இக்கிளைக்கதையாகிய எலும்புக்கூட்டிற்குச் காளிதாசர் தன் கற்பனைத்திறத்தால் சதை, இரத்த ஓட்டம், உயிர்ப்பு ஆகியவற்றை ஊட்டுவித்திருக்கிறார். மஹாபாரதத்தில் இருந்து கதையை எடுத்தாண்டாலும் பாத்திரப்படைப்பிலும் கதைச் சம்பவங்களின் கோவை ஒழுங்கிலும், கதை கூறப்படும் பாங்கிலும் ஆசிரியர் தமது கற்பனையையே புகுத்தியுள்ளார். மூலக்கதையில் இடம்பெறாத சம்பவங்கள் பல நாடகத்தில் இடம் பெற்று கதையைச் சிறப்பிக்கின்றன.