Abstract:
காவியவுலகம் என்ற புதிய உலகத்தைப் படைக்கும் பிரமன் கவிஞன் ஒருவனே, அவனுக்கு எப்படி எப்படியெல்லாம் உலகம் தோற்றமளிக்கிறதோ , அப்படி அப்படியெல்லாம் உருக்கொள்கிறது என ஆனந்தவர்த்தனர் கூறுவர். கவிஞன் படைத்துத் தரும் பொருளின் இன்பநிலை எத்தன்மையது? அவன் படைப்புக்கள் எப்படி அமையவேண்டும் ? கவிதை படைக்க புலவனத்தூண்டும் அம்சங்கள் யாவை கவிதையில் சேர்க்க வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை குறித்து சமஸ்கிருத திறகாய்வாளர்கள் காலத்துக்கு காலம் விடைகாண முயன்றிருக்கிறார்கள். அவர்களது திறனாய்வுக்கு முன்மாதிரியாக இலக்கியம் படைத்த புலவர்களின் வாழ்வு அமைந்துள்ளது. கவிஞரும், திறனாய்வாளருமான ராஜசேகரர் கவிஞன் பற்றி காவ்மீமாஞ்சையில் கூறும் கருத்துக்கள் இவ்வாய்வுக் கட்டுரையில் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.