Abstract:
சம்ஸ்கருத இலக்கியத்திறனாய்வுக் கோட்பாட்டில் ரசக்கோட்பாடு தலையாயதும், பிரதானமானதுமாகும். ச்ரவ்ய காவியங்கள் மட்டுமன்றி திருஷ்யகாவியங்களான நாடகங்களையும் அவை அலங்கரிக்கின்றன. நாட்டிய சாஸ்திரத்திற்கு உரைவகுத்தவரான அபிநவகுப்தர் ரசங்கள் நாட்டியத்துடன் கொண்டிருந்த தொடர்பை விளக்கும் போது நாட்டியம் முழுமையினின்றும் ரசங்கள் பிறப்பிக்கப்படுகின்றன. வேறுவகையாகச் சொல்லப் போனால் ரசங்களின் தொகுதியே நாட்டியம், நாட்டியமே ரசம் என்று கூறுவார். காளிதாசரது அபிக்ஞானசாகுந்தலம் நாடகங்களில் சிறந்தது என்ற பாராட்டைப் பெறுகிறது. “தாசாரசம் த்ருஷ்யதே” என்று மாளவிகாக்நிமித்திரம் என்ற தமது நாடகத்தில் பல ரசங்களும் அந்நாடகம் பெற்றிருத்தலை வியந்து கூறுவார்.