Abstract:
இன்றைய அறிவியல் தொழில்நுட்ப யுகத்தில் கடந்த சில தசாப்தங்களாக உலகமயமாக்கல் முனைப்புப்பெற்று வருகின்றது. உலகமயமாக்கல் என்பது உலகநாடுகளையும் அவற்றில் வாழும் மக்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு செயல்பாடாகும்;. அது பொருளாதார, தொழில்நுட்ப, கலாசார மற்றும் அரசி;யல் பிணைப்புக்கள் ஊடாக உலகமக்களை மிக அருகில் எடுத்துவருவதுடன், அவர்கள் ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கும் நிலையையும் அதிகரிக்கச் செய்கின்றது. இதில் கலாசார உலகமயமாக்கலில் பண்பாடு மையவிசையாய் அமைகின்றது. அந்தவகையில் இந்துப்பண்பாடு சார் ஆய்வில் இந்துப்பண்பாட்டின் ஒருகூறாகிய இந்துசமயம் உலகமயமாக்கலில் முக்கியப்படுத்தப்படுகின்றது. உலகமயமாக்கலினால் இந்து சமயம் எதிர்நோக்கும் சவால்களை இனங்காணுதலும் இந்துசமயத்தை மேம்பாடடையச் செய்வதற்;கான முன்னெடுப்புக்களை எடுத்துரைப்பதும் இவ்வாய்வின் நோக்கமாக அமைகின்றது. உலகமயமாக்கலினால்; கிரியைகள், வாழ்வியல், திருக்கோயில்கள், கல்வி போன்ற இந்துசமயக்கூறுகள் சவால்களை எதிர்நோக்குகின்றன என்பது இவ்வாய்வின் மூலம் இனங்காணப்பட்டுள்ளன. விபரண மற்றும் பகுப்பாய்வு முறைகளில் மேற்கொள்ளப்படுவதுடன், இவ்வாய்வுக்கான தரவுகள் களஆய்வு மூலம் வெளிக்கொணரப்படுகின்றது.