Abstract:
‘சிவபூமி’ என்று திருமூலரால் போற்றப்பட்ட ஈழத்திருநாட்டிலுள்ள சிவாலயங்கள் மீதெழுந்த சைவத்தமிழ் இலக்கியங்களில் தலபுராணங்கள் முக்கிய இடம்பெறுகின்றன. தலபுராணங்கள் மூர்த்தி, தலம், தீர்த்தம் பற்றிய கோயிற் பண்பாட்டை சிறப்பாகப் புலப்படுத்துவது மட்டுமன்றி சைவப்பண்பாட்டின் பல்வேறு பரிமாணங்களையும் விரித்துரைக்கின்றன. மனிதகுல மேம்பாட்டை வளர்த்தெடுக்கக்கூடிய பல்வேறு பொருளாதார சிந்தனைகளை விரித்துரைக்கும் நூல்களாக தலபுராணங்கள் விளங்குகின்றன எனும் கருதுகோளின் அடிப்படையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வானது விபரண ஆய்வுமுறையியல், வரலாற்று ஆய்வுமுறையியல் மற்றும் கள அய்வுமுறையிலும் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஈழத்தில்; கி.பி 14ஆம் நூற்றாண்டு தொடக்கம்; 20ஆம் நூற்றாண்டிற்;கும் இடைப்பட்ட காலத்தை எல்லையாகக் கொண்டு இவ்வாய்வு அமைகின்றது. இக்காலப்பகுதிக்குள்; திருக்கோணேச்சரம், திருக்கேதீச்சரம், திருக்கரைசை, நகுலேச்சரம், ஈழத்துச்சிதம்பரம், நல்லூர் ஸ்ரீகைலாஸநாத ஆலயம் முதலிய ஆறு சிவாலயங்கள் மீதும் ஒன்பது தலபுராணங்கள் தோன்றியுள்ளன. இவ்வொன்பது தலபுராணங்களுமே ஆய்வின் மூலங்களாக அமைந்துள்ளன. ஈழத்துத்தலபுராணங்கள் புலப்படுத்தும் பொருளாதார சிந்தனைகளை வெளிக்கொண்டுவருவது இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும்.