Abstract:
சம்ஸ்கிருதமொழி தென்னாசியா முழுவதிலும் பரவியிருந்த ஓர் பண்பாட்டு மொழியாகும். இம் மொழியினினது வளத்தின் செல்வாக்கு பிரதேச மொழிகளிலும் தாகக்த்தை ஏற்படுத்தியது. இம்மரபில் இலங்கையின் எண்ணிறைந்த சாசனங்கள் காணப்படுகின்றன. இச்சாசனங்களுள் சுமார் கி.பி 16ம் நூற்றாணடு; காலம் வரையாக இனங்காணப்படும் சாசனங்களுள் சம்ஸ்கிருத மொழியில் செல்வாக்கு மொழி, சொல்மரபு, யாப்பு,எழுத்து முதலான பல்வேறு நிலைகளில் செல்வாக்குச் செலுத்தியுள்ளது. இலங்கையின் சம்ஸ்கிருத சாசனங்கள் பற்றியும் இலங்கையின் ஏனைய சாசனங்களில் சம்ஸ்கிருத மொழியின் மொழியியல், இலக்கண, வரிவடிவம், சொன்மரபுத்தாக்கங்கள் எத்தகையது என ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியமாகின்றது. இலங்கை மன்னருள் 6ம் பராக்கிரமபாகு மன்னன் காலத்து சாசனமே முன்னேஸ்வரம் தமிழ்ச்சாசனமாகும். இச்சாசனத்தில் பல்லவ கிரந்தர வடிவில் சம்ஸ்கிருத மொழிச் சொற்கள் மொழியமைப்பிலும் செல்வாக்குப் பெறுகின்றது. இம்மொழிகளின் வரிவடிவம் எவ்வாறு இலங்கையில் தனக்குரிய செல்வாக்கினை ஏற்படுத்தியது என நோக்குவதே, இவ்வாய்வின் சுருக்கமாகும்.