Abstract:
தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று நைடதம் ஆகும். அதிவீரராமபாண்டியனால் இக்காப்பியம் இயற்றப்பட்டது. இக்காப்பியம் இயற்றப்பட்டது. இக்காப்பியம் செந்தமிழ் இலக்கியமாக 28 படலங்களையும் 1172 செய்யுட்களையும் கொண்டது. நிடதநாட்டு மன்னன் நளன் தமயந்தியின் கதைமரபை இலக்கிய நயத்துடன் கூறும் இக்காப்பியம் சம்ஸ்கிருத காவியவியல் முறைமைகளையும், ஸ்ரீநைஷரது நைஷதம் அல்லது நைஷதீய சரிதத்தைத் தழுவிய தமிழ்க்காப்பியமாகத் திகழ்கிறது. இக்காப்பியத்தில் காணப்படும் இலக்கியச்சிறப்புக்களையும் சிறப்பாக மேலைப்புலோலி நா.கதிரைவேற்பிள்ளையின் விருத்தியுரையினையும் அடித்தளமாகக் கொண்டு அறிஞர்களுக்கு அருமருந்தாக விளங்கும் நைஷத காவ்யம் எத்தகைய சிறப்புடன் விளங்குகின்றது என்பதனை இலக்கிய விவரண ஆய்வு முறையியலாகவும் ஒப்பியல் ஆய்வு முறையியலுடன் வரலாறியல் ஆய்வுமுறையுடன் கூடியதாக தமிழ் மற்றும் சம்ஸ்கிருத நைஷத காவியங்களினை இலக்கிய நோக்கில் ஒப்பு நோக்கும் தன்மையுடையதாக விளங்குகின்றது. இவ்வாய்வினூடாக இலக்கியவியல் நோக்கில் காப்பியங்கள் மொழி மாற்றம் செய்யப்படும் சந்தர்ப்பங்களில் பெறும் முக்கியத்துவத்தையும் தனித்துவத்தையும் சிறப்புத்தன்மைகளையும் வெளிக்கொணருவதாக அமையும் தன்மை என்பன இவ்வாய்வினூடாக வெளிப்படுத்தப்படும்.