dc.description.abstract |
இருபதாம் நூற்றாண்டில் மெய்யியலில் ஏற்பட்ட திருப்புமுனைக்கும், அதன் புரட்சிகரமான மாற்றத்துக்கும் அடிப்படையாக ரஸலினுடைய சிந்தனைகள் அமைந்திருந்தன. குறிப்பாக ரஸலினுடைய தர்க்க அணுவாத சிந்தனைகள் மெய்யியல் வரலாற்றில் பல்வேறு மாற்றங்களுக்கு வித்திடுவதாக அமைந்தன. சாதாரண மொழியில் ஏற்படக்கூடிய பொருள் மயக்கங்களும், தெளிவற்ற தன்மைகளும், குழப்பங்களும், தவறான புரிதல்களுமே அளவையியலினதும், மெய்யியலினதும் வளர்ச்சிக்கு பாரிய தடைக்கல்லாக இருந்து வந்துள்ளன. இதனாலேயே மெய்யியலில் பல பிரச்சினைகளும், வாதப் பிரதிவாதங்களும் தோன்றின. இப்பிரச்சினைகளில் இருந்து விடுபடுபட்டு மெய்யியலும், அளவையியலும் வளர்ச்சியடைவதற்கு மொழியைப் பகுப்பாய்வு செய்வதும், இலட்சிய மொழி ஒன்றினை உருவாக்குவதுமே அவசியமாய் அமைந்தது. அத்தகையதொரு பணியினை ரஸலினுடைய தர்க்க அணுவாதம் முன்னெடுத்தது. தர்க்க அணுவாதம் மொழி குறித்த பகுப்பாய்விற்கு முதன்மையளித்தது. அதன் மூலம் மெய்யியற் பிரச்சினைகளைத் தெளிவுபடுத்த முனைந்தது. தர்க்க அணுவாதமானது ஒர் இலட்சிய மொழியினை உருவாக்குவதனை நோக்கமாகக் கொண்டு செயற்பட்;டது. இந்த வகையில் குறியீட்டு அளவையியல் வழியாக மெய்யியல் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்ற தன்னுடைய கருத்தினை ரஸல் தர்க்க அணுவாதத்தினூடாக முன்வைத்தார். இதனூடாக அவர் குறியீட்டு அளவையியலின் வளர்ச்சிக்கு வழிவகுத்ததோடு, அதன் வழியாக மெய்யியற் பிரச்சினைகளைப் பகுப்பாய்வு செய்து பகுப்பாய்வு மெய்யியலின் வளர்ச்சிக்கும் வித்திட்டார். ரஸலினது தர்க்க அணுவாதத்திற்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்த பொழுதிலும் அவரது அணுவாத சிந்தனைகள் பிற்பட்டகால மெய்யியற் சிந்தனைப்பள்ளிகள் பலவற்றுக்கு முன்னோட்டமான கருத்துக்களைக் கொண்டிருந்தன. எனவே மொழி குறித்த பகுப்பாய்விலும், அதனூடாக மெய்யியற் பிரச்சினைகளைத் தெளிவுபடுத்துவதிலும் தர்க்க அணுவாதக் கோட்பாடு பெற்றிருந்த முக்கியத்துவத்தினையும், அதற்கெதிரான விமர்சனங்களையும், அதன் பிற்பட்ட வளர்ச்சியையும் ஆராய்வதாக ஆராய்வதாக இவ் ஆய்வுக்கட்டுரை அமைகின்றது. |
en_US |