DSpace Repository

பல்லவர்கால பக்தி இயக்கத்தின் வளர்ச்சியில் மெய்யியலின் செல்வாக்கு' – ஒரு பகுப்பாய்வு

Show simple item record

dc.contributor.author Nirosan, S.
dc.contributor.author Sivakaran, N.
dc.date.accessioned 2021-12-10T07:59:04Z
dc.date.accessioned 2022-06-27T07:36:17Z
dc.date.available 2021-12-10T07:59:04Z
dc.date.available 2022-06-27T07:36:17Z
dc.date.issued 2015
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4464
dc.description.abstract இவ் ஆய்வுக் கட்டுரையானது பல்லவர்கால பக்தி இயக்கத்தினர் தமிழையும், தமிழ் சமுதாயத்தையும், சமயக் கருத்துக்களையும் மற்றும் அனுட்டானங்களையும் மேன்மையுறச் செய்வதற்கு எவ்வாறு சமய மெய்யியற் சிந்தனைகளினை பின்புலமாக பயன்படுத்தியிருந்தார்கள் என்பதனை பகுப்பாய்வு செய்வதாக அமைகின்றது. குறிப்பாக இறையிருப்பு, மறுபிறப்பு, ஊழ்வினைப் பயன், ஆன்ம விடுதலை, ஒழுக்க விழுமிய சிந்தனைகள் ஆகிய சமய மெய்யியற் சிந்தனைகள் பக்தி இயக்கத்தினரால் முதன்மைக்குரிய விடயங்களாக எடுத்தாளப்பட்டிருந்தன. மேற்குறித்த விடயங்கள் தொடர்பான தமது சிந்தனைகளை நிலைபெறச் செய்வதற்காக அவர்கள் பல்வேறுபட்ட மெய்யியல் முறையியல்களினை கையாண்டிருந்தனர். குறிப்பாக வாதங்கள் (யசபரஅநவெ), உரையாடல்கள் (னயைடநஉவiஉ), இயங்கியல் முறைகள் (னலயெஅiஉ), ஐயமுறை (னழரடிவ), தோற்றப்பாட்டியல் முறை (phநழெஅநழெடழபல) உய்த்தறி (னநனரஉவiஎந) தொகுத்தறி (iனெரஉவiஎந) போன்ற முறையியல்களினைப் பயன்படுத்தி தமது சிந்தனைகளினை, சமய உண்மைகளினை நிலைநிறுத்தியிருந்ததுடன் மட்டுமல்லாது பல்லவர் காலமானது தமிழர் மெய்யியல் வரலாற்றில் தத்துவ வளர்ச்சியில் ஒர் திருப்புமுனைக்குரிய காலமாகவும் ஆய்வாளர்களால் கருதப்படுவதற்கு காரணமாக அமைந்திருந்தது. பக்தி இயக்கத்தினர் தமது சிந்தனைகளினையும், சமய உண்மைகளினை நிலை நிறுத்துவதற்காக முன்னெடுத்த செயற்பாடுகள் ஒவ்வொன்றிலும் மெய்யியல்சார் நுட்ப முறைகள் பிரதிபலித்திருந்தன. தமிழிசைப் பாடல்களை ஊடகமாகக் கொண்டு தாம் கூறவந்த கருத்துக்களை வெளிப்படுத்தியமைளூ வாதங்கள் பல புரிந்தமைளூ பதிகங்கள், பிரபந்தங்கள் போன்றவற்றின் மூலம் இறைவனுக்கு உருவம் கற்பித்;தமைளூ உலகியல் வாழ்வினைப் போற்றி அதனூடே விடுதலைக்கு வழிகாட்டியமைளூ கிராமம் கிராமமாகச் சென்று அங்குள்ள இயற்கை எழிலையும், அங்குள்ள கோயில்களில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் சிறப்பினையும் பாடியமைளூ அற்புதங்கள் பல செய்து இறைவன் மீது நம்பிக்கையும், பக்தியையும் ஏற்படுத்தியமைளூ சமூக சமரசம் பேணியமைளூ இயற்கையில் இறைவனைக் காண விளைந்தமைளூ இதிகாச புராணங்கள் கூறும் தத்துவார்த்த கருத்துக்களை தேவாரங்களிலும், பாசுரங்களிலும் வெளிப்படுத்தியமைளூ கலைகளை பக்தியோடு இணைத்து அவற்றை முதன்மைப்படுத்தியமைளூ பல்வேறு உறவுமுறைகளுக்கு ஊடாக ஆன்மாவுக்கும் இறைவனுக்கும் இடையிலான நெருக்கமான தொடர்புகளை வெளிப்படுத்தியமைளூ பிறமத கண்டனங்கள் செய்தமைளூ சைவ, வைணவ மதங்களிடையே ஒற்றுமையை பேணியமை போன்ற அவர்களது செயற்பாடுகள் அனைத்திலும் மேற்குறித்த தர்க்க ரீதியான மெய்யியல் முறைமைகள் உள்ளுறையாய் அமைந்திருந்தன. எனவே இன்றைய காலகட்டம் வரை தமிழும், தமிழ் சமுதாயமும் நின்று நிலைக்க அடித்தளமிட்ட பக்தி இயக்கத்தினரின் சமய மெய்யியற் சிந்தனைகளையும், அவை எடுத்தாளப்பட்ட நுட்பங்களையும் குறித்த சிந்தனைகளை விரிவுபடுத்துவதாக இவ் ஆய்வு அமைகின்றது. இவ் ஆய்வின் மூலம் காலம் சூழலுக்கு ஏற்ப தாம் சொல்லவந்த சமய மெய்யியற் சிந்தனைகளை நுட்பமுற எடுத்தியம்பிய பக்தி இயக்கத்தினரின் சிறப்பியல்புகளை எடுத்தியம்ப முடிவதுடன், தமிழ் சமுதாயத்தினைக் கட்டிக் காப்பாற்றியதில் அவர்களது பங்களிப்பினையும் கண்டுணர முடிகின்றது. இவ் ஆய்வுக் கட்டுரையானது பகுப்பாய்வு முறையியல், விபரண முறையியல், வரலாற்று முறையியல் என்பவற்றின் துணை கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது. அத்தோடு இவ் ஆய்விற்கான தரவுகள் பல்லவர்கள் கால தமிழ் மூலநூல்களையும், தமிழ் இலக்கிய வரலாற்றுச் சம்பவங்களை எடுத்தியம்பும் நூல்கள், சஞ்சிகைகள் போன்றவற்றில் இருந்தும் பெறப்பட்டுள்ளன. en_US
dc.language.iso other en_US
dc.publisher மலாயாப் பல்கலைக்கழகம், மலேசியா en_US
dc.subject பக்தி இயக்கம் en_US
dc.subject வைதீக சமயங்கள் en_US
dc.subject நாயன்மார்கள் en_US
dc.subject ஆழ்வார்கள் en_US
dc.subject நுட்பமுறைகள் en_US
dc.title பல்லவர்கால பக்தி இயக்கத்தின் வளர்ச்சியில் மெய்யியலின் செல்வாக்கு' – ஒரு பகுப்பாய்வு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record