dc.identifier.citation |
நிரோசன், சி., (2018) நுகர்வோர் சமூகம் - பௌதிலார்ட்டினுடைய சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் பின்னவீனத்துவப் பார்வை, சிந்தனை, தொகுதி XVIII, இதழ் 1, கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், |
en_US |
dc.description.abstract |
இவ் ஆய்வுக் கட்டுரையானது நுகர்வு, அதனுடைய பரிமாணம், அதனுடைய சமூகக் கட்டமைப்பு, அச் சமூகக் கட்டமைப்பினை அடித்தளமாகக் கொண்ட முதலாளித்துவ சமூகத்தின் ஆதிக்கம் என்பவற்றை பின்னவீனத்துவ சிந்தனையாளரான பௌதிலார்ட்டினுடைய சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்கின்றது. இன்றைய சமூகத்தில் நுகர்வு என்பது தவிர்க்க முடியாத ஒரு சமூகப், பொருளாதார செயற்பாடாக மாற்றமடைந்துள்ளது. இந்த நுகர்வு என்ற வலைப்பின்னலுக்குள் ஒவ்வொரு மனிதனும் தவிர்க்க முடியாதபடி உள்வாங்கப்படுகின்றான். தனது தேவைகளைப் பொருட்களாகவும், சேவைகளாகவும் நுகர்வு செய்வதாக அவன் அபிப்பிராயப்படுகின்றான். ஆனால் அந்த தேவைகள் கூட உள்ளார்ந்தமானவைகளாக அல்லாமல் புறத்தே இருந்து கட்டமைக்கப்படுவதனை அறியத் தவறிவிடுகின்றான். எனவே இந்த நுகர்வோர் சமூகத்தினுடைய கட்டமைப்புக் குறித்த விழிப்புணர்வு தேவைப்பாடுடைய ஒன்றாகின்றது. பின்னவீனத்துவத்தைத் தளமாகக் கொண்ட பௌதிலார்ட்டினுடைய நுகர்வோர் சமூகம் குறித்த சிந்தனைகள் இந்த தேவைப்பாட்டினை நிவர்த்தி செய்வதாக அமைகின்றன. எனவே நுகர்வு, நுகர்வு பற்றிய புரிந்து கொள்ளலில் பின்னவீனத்துவத்தின் குறிப்பான், குறிப்பீடு பற்றிய சிந்தனைகளின் செல்வாக்கு, நுகர்வோர் சமூகத்தில் பொருள் மதிப்பு முறைமை, புதிய சமூக ஒழுங்காக மாற்றமடைந்துள்ள நுகர்வோர் சமூகம் என்பன பற்றிய பௌதிலார்ட்டினுடைய சிந்தனைகளைப் பகுப்பாய்வு செய்தவன் மூலம் நுகர்வோர் சமூகத்தில் அங்கத்தவர்களாக உள்ள எமது நிலை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துவதே இவ் ஆய்வின் நோக்கமாகும். இவ்வாய்வானது விபரண முறை, பகுப்பாய்வு முறை ஆகிய முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, இவ் ஆய்வுக்கான தரவுகள் பௌதிலார்ட்னுடைய நூல்களில் இருந்து முதன்நிலைத் தரவுகளாகவும், பௌதிலார்ட்டினுடைய சிந்தனைகளைப் பற்றி வெளிவந்த ஏனைய நூல்கள், பருவ இதழ்களில் இருந்து இரண்டாம் நிலைத் தரவுகளாகவும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. பௌதிலார்ட்டினுடைய சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு நுகர்வு என்பது ஒரு புதிய சமூக ஒழுங்கு என்பதனை இவ் ஆய்வு வெளிப்படுத்தி நிற்கின்றது. |
en_US |