Abstract:
பல்லினச் சமூகத்தவர்கள் வாழ்ந்து வருகின்ற யாழ்ப்பாணக் குடாநாட்டில் இஸ்லாமிய மக்களுக்கென அச்சமூகத்தில் தனியான சிறப்பும்இ அவர்களுக்கென அப்பகுதியில் நீண்டதொரு வரலாற்றுப் பாரம்பரியமும் உண்டென்பது மறுப்பதற் கில்லை. இவர்களது ஆரம்பகாலக் குடிப்பரம்பல் காணப்பட்ட பகுதிகளாக நயினாதீவு, மண்கும்பான், மண்டைதீவு, அல்லைப்பிட்டி, காரைதீ|வு போன்ற தீவுப்பகுதிகளும்இ குடாநாட்டில் கொழும்புத்துறை, அலுப்பாத்தி, சாவகச்சேரி, உசன், பருத்தித்துறை, கொடிகாமம் முதலான சில இடங்களும் இனங் காணப்பட்டுள்ளன. இருப்பினும் ஏற்கனவே யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையிலான வர்த்தகத்தொடர்புகள் கி.பி 8ஆம் நூற்றாண்டிலிருந்தே காணப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. போர்த்துக்கேயர்களது காலத்திலும்சரிஇ தொடர்ந்து வந்த ஒல்லாந்தர்கள் மற்றும் ஆங்கிலேயர்களது காலத்திலும்சரிஇ சுதந்திரத்தின் பின்பாகவும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் தங்களுக்குரிய சமூகஇ பொருளாதாரஇ பண்பாட்டு அடையாளங்களைப் பின்பற்றி வந்தவர்களாகவே முஸ்லிம் மக்கள் இருந்து வந்துள்ளனர். இவ்வாறு யாழ்ப்பாணக் குடாநாட்டில் யாழ்ப்பாணத்து அரசர்களது காலந்தொடக்கம் குடியேறிச் செல்வாக்குடன் யாழ்ப்பாணத் தமிழ் மக்களுடன் பல நூற்றாண்டுகளாக இணைந்த வகையில் வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்கள் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் காரணமாக 1990இன் பின்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டினைவிட்டு இலங்கையின் பிற பகுதிகளுக்கு இடம்பெயர வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். பின்னர் மீளவும் நாட்டில் ஏற்பட்ட சுமூகநிலமையின் காரணமாக இன்று அவர்கள் தாங்கள் வாழ்ந்த பகுதிகளை நோக்கிப் படிப்படியாக மீளக் குடியேறி வருகின்றனர்