dc.description.abstract |
இந்து சமயம் யாழ்ப்பாணப் பிரதேசத்தில்; 86மூ மக்களினால்; பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்து ஆலயங்கள் இந்துப்பண்பாட்டின் நிலைக்களனாக விளங்குகின்றன. பெரும்பாலான மக்கட்குழுக்களின் நிறுவனங்களான சனசமூக நிலையம், கிராம முன்னேற்றச்சங்கம், இளைஞர் விளையாட்டுக் கழகம், பொது மண்டபம், திருமண மண்டபம் போன்றவை ஆலயங்களுக்கு அருகிலேயே காணப்படுகின்றன. அந்த வகையில் இந்து சமய வாழ்வியலின் முக்கிய கூறாகிய ஆலயங்கள் கடந்த மூன்று தசாப்த காலங்களில் பல்வேறு காரணங்களினால் பெரும் நெருக்கடிகளை எதிர் கொண்டு வருகின்றது. இந்து ஆலயங்கள் எதிர்நோக்கும் சமகாலப் பிரச்சினைகளை இன்றைய சூழ்நிலையில் வெளிக் கொணர்வதும், இப்பிரச்சினைகளுக்கான காரணங்களைத் தெளிவாக இனம் கண்டு யாழ்ப்பாணத்து இந்து ஆலயங்களின் வளமான மேம்பாட்டிற்க்கான முன்மொழிவுகளை எடுத்துரைப்பதும், இவ்வாய்வின் நோக்கங்களாக அமைகின்றது.கடந்தகால அசாதாரன சூழ்நிலையினால் இந்து ஆலயங்கள் பெரும்பிரச்சினைகளை உள்வாங்க நேரிட்டது. அந்தவகையில் யாழ்ப்பாண பிரதேசத்தில் சமகாலத்தில் இந்து ஆலயங்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினைகளான நிர்வாகச் சீர்கேடு, திருப்பணி வேலைகளின் ஒழுங்கீனம், கிரியைகள், விழாக்கள், விரதங்கள் என்பவற்றை முறைமையாகப் பேணாதிருத்தல், ஆலயங்களை வழிபட வருவோர் அதற்குரிய ஒழுங்கு, ஒழுக்கத்தை கடைப்பிடியாதிருத்தல், சாஸ்திரிய முறைப்படி ஆலயங்களில் கலைகள் பின்பற்றப்படாமை, ஆலயச்சூழல் பிற சமய நிகழ்வுகளால் பாதிப்படைதல், மூடநம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல், திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்தல் மற்றும் நகர நிர்மாண வேலைத் திட்டங்களினால் பாரம்பரிய, புனித இடங்கள் அழிக்கப்படுதல் என்பன இனம் காணப்பட்டுள்ளன. இவ்வாய்வானது யாழ்ப்பாண மாவட்டத்தை மட்டும் ஆய்வு எல்லையாகக் கொண்டு ஆய்வு செய்யப்படுகின்றது. இவ்வாய்வானது விபரணமுறை, பகுப்பாய்வு முறை ஆகிய ஆய்வு முறைமைகளில் மேற்கொள்ளப்படும். மேலும் இவ்வாய்வுக்கான விடயங்கள் கள ஆய்வு மூலம் வெளிக்கொணரப்படும். யாழப்பாணத்து இந்து ஆலயங்கள் சமகாலத்தில் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது என்பது இவ்வாய்வின் மூலம் பெறப்படுகின்றது. அந்தவகையில் இந்து ஆலயங்களின் சமகாலப் பிரச்சினைகளுக்கு இவ்வாய்வின் மூலம் முன்வைக்கப்படும் தீர்வுகளாக, மறுசீரமைக்கப்பட்ட ஆலய நிர்வாக, திருப்பணிச்சபைகளை உருவாக்குதல், இந்து ஆலய செயற்பாடுகளில் முதியவர்களுடன் பெண்கள், இளைஞர்களையும் இணைத்துக்கொள்ளுதல். மற்றும் இந்து மக்கள் மத்தியில் சமய விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் போன்ற முன்மொழிவுகளை முன்வைத்து, அவற்றினை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக, நீடித்து நிலைத்து நிற்;கக்கூடிய வகையில் இந்து ஆலய செயற்பாடுகள் அமைந்து, மீண்டும் இந்து ஆலயங்களை செயல்திறன் கொண்ட ஒரு சமூக மைய நிறுவனமாக மாற்றியமைக்கமுடியும் என்பது இவ்வாய்வின் மூலம் பெறப்படுகின்றது. |
en_US |