Abstract:
யோ. கண்ணனின் இயற்பெயர் யோகநாதன் முரளி என்பதாகும். இவர் கவிதை, சிறுகதை, குறும்படம் என்ற படைப்பு இலக்கியங்களைப் படைத்து வருபவர் இவர் இரு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். சிறுகதையின் முதற்றொகுதி 2010 அளவில் வெளிவந்தது. செகுவேரா இருந்த வீடு என்ற பெயரில் வெளிவந்த சிறுகதைத் தொகுதி போராட்டம் முடிவடைந்த பின்னர் 2012 மாசிமாதம் வெளியிடப்பட்டது. ஈழத்தமிழ் மக்களின் (30 வருடகாலம்) வாழ்வியல் இச்சிறுகதைகளின் ஊடாக புலப்படுத்தப்படுகின்றது. சிறுகதையின் ஊடாக வரலாறு சொல்லப்படுகின்றது. தமிழர்களின் மீட்சிக்குத் தேவையான பாட கற்பிதங்கள் இச்சிறுகதைகளின் ஊடாக புலப்படுத்தப்படுகின்றது. இந்நூல் இந்திய அறிஞர்களின் பாராட்டினைப் பெற்றது. தமிழர் ஒவ்வொருவரும் இந்நூலினைக் கற்பது கட்டாய தேவையாகும். முப்பது வருட கால போராட்ட வரலாறு சிறுகதைகளினூடாகப் பேசப்படுகின்றது. ஜனநாயக அடிப்படையில் பல விடயங்கள் அணுகப்படுகின்றது. சிறுகதை வடிவத்தின் ஊடாக விஞ்ஞான பூர்வமாக வாழ்வியல் பேசப்படுகின்றது. தமிழ்மக்களின் மேம்பாட்டிற்கு இந்நூல் ஒரு படிக்கல்லாக அமைகின்றது. இந்நூலின் முக்கியத்துவம் கருதி இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாய்வு விமர்சன ஆய்வு, ஒப்பீட்டு ஆய்வு என்ற ஆய்வு முறையியலை அடிப்படையாகக் கொண்டது. சிறுகதை என்பதற்குப் பலர் பலவாறு விளக்கம் கொடுப்பர். 'ஏதோ ஒரு காட்சியினை வழங்கி எவ்வளவோ உய்த்துணர வைக்கும் அரிய கலைநுட்பம் சான்ற கலைவடிவம். 'ஒரு புள்ளிக்குள்ளேயே விசுவரூபம் தெரிய வேண்டும்' என்பர். இன்னும் குறிப்பிட்ட ஒரு சம்பவத்தில் மனித மனம் படும்பாட்டை அல்லது ஒரு பாத்திரம் இயங்குகின்ற முறைமையைக் குறிப்பதுவே சிறுகதை என பேராசிரியர் கா.சிவத்தம்பி கூறுவது இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழ்க்கதை, கதைகதையாம் காரணமாம், அரிசி, சீட்டாட்டம், வேதாளத்திற்கு சொன்னகதை, சோசலிசம், திரும்பிவந்தவன், திரும்பி வந்தவள் பாலையடிச்சித்தர் பாவமன்னிப்பு, செகுவேரா இருந்த வீடு, ஐயனின் எஸ்.எல்.ஆர்; இரண்டாவது தலைவர் என அவரது சிறுகதைகள் அமைகின்றன. பதின்மூன்று சிறுகதைகளை உள்ளடக்கியது. பன்முகப் பரிமாணங்கொண்ட சிறுகதைகள். ஆசிரியர் இக்கதைகளின் ஊடாக நேரடியாக வாசகர்களோடு பேசுகின்றார். இறந்த கால வாழ்வைக் காட்டுவதன் வாயிலாக எதிர்கால வாழ்வைத் திட்டமிடலாம். இலக்கியவாதிகள் இறந்த காலத்தின் ஊடாக நிகழ்கால எதிர்காலத்தைக் காட்டுவார்கள். யோ.கர்ணன் யுத்தத்தின் சாட்சியாக நிற்பவன் யுத்த சாட்சியத்தின் குரலாக நின்று ஜனநாயக வழியைக் காட்டுகிறார். போர் என்ற ஒன்று இனிமேல் இந்நாட்டில் இருக்கக் கூடாது. ஜனநாயக வழி என்பது நாட்டின் அபிவிருத்திக்கு வழிகோலும் என்பதை இச்சிறுகதைகள் புலப்படுத்துகின்றன. 30 ஆண்டுகளாக யுத்தம் நடைபெற்றது. அதனால் தனிமனிதன், சமுதாயம், நாடு பாதிப்புக்குள்ளாகியது. அவலத்தினாலும் சோகத்தினாலும் நாடு தடம்புரண்டது. அது பண்பாட்டை பாதித்து எனக் காட்டி அதில் இருந்து மீட்சி பெற வேண்டியதான அவசியத்தை இக்கதைகள் காட்டுகின்றன. தனித்துவங்கள், அடையாளங்கள், எச்சங்கள் அழிக்கப்பட்டன. பண்பாட்டினை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய தேவையை இக்கதைகள் வெளிப்படுத்துகின்றன. உத்திகளாக படிமம் கையாளப்படுகின்றது. அரவி, சீடாட்டம் என்ற கதைகள் படிம உத்தியைப் பபின்பற்றுகின்றன. தொன்மக்கதையை ஆசிரியர் பின்பற்றுவதைக் காணலாம்.
வேதாளம் சொன்ன கதை கதைத் தொன்மத்தைப் பயன்படுத்துவதைக் காணலாம் இக்கதைகள் யுத்தத்தின் காட்சியாக அமைகின்றன. அவர் பக்க சார்பற்று மனக்காட்சியின் (உள்சத்தியத்தின் தொனியில்) தொனியில் பேசுகின்றார். அவரது கதைகளில் பல வினாக்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் தொடுப்பவராக விளங்குகின்றார். யோகர்களின் பொய்கள் அற்ற ஈழத்து மக்களின் வாழ்வியல் ஆவணமாக பதியப்பட்டுள்ளது. இன்று ஈழப்போராட்டம் முடிவுக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவு பெறப்போகும் இத்தருணத்தில் எல்லோருக்கும் வந்து சேர வேண்டிய மனநிலை வலராற்றிலிருந்து பாடம் கற்பதற்கான ஆவணமாக இத்தொகுப்பு அமைந்துள்ளது. மனச்சாட்சியுள்ள ஒவ்வொரு தமிழனும் இன்று வாசிக்க வேண்டிய மிகமுக்கியமான நூல். இது, யுத்த அனுபவத்தைத் தந்து வாழ்க்கையை உரை வைக்கிறது. போரை சமூகத்தில் இருந்து நீக்க வேண்டும்;;;; அபிவிருத்தி நோக்கிச் செல்ல வேண்டும் என்பதே யோ.கர்ன்னனின் சிறுகதைகள் காட்டும் வாழ்வியலாகும். நிகழ்கால எதிர்காலத்தில் அமைதியான ஜனநாயக அடிப்படையிலான ஒரு வாழ்வியலை உருவாக்க தேவையான அடிப்படைச் சிந்தனைகளை முன் வைக்கின்றது. உரிமைகள் மறக்கப்படும் பொழுது அவலம் உண்டாகும் என இறந்த காலத்தைக் காட்டி நிகழ்கால, எதிர்கால வளர்ச்சி எப்படி அமைய வேண்டும் என சிறுகதைகள் காட்;டுகின்றன. தனிமனிதன் சகல உரிமைகளோடு அமைதியாக சந்தோசமாக இருக்கும் பொழுது சமுதாயம் வளர்ச்சி பெறும். சமுதாயம் வளர்ச்சி பெற்றால் நாடு அபிவிருத்தியடையும் என்பதை இக்கதைகள் காட்டுகின்றன. இறந்த காலத்தில் ஏற்பட்ட அவல வாழ்வியல் நிகழ்கால எதிர்காலத்தில் இல்லாது புத்தெளிச்சி பெற வேண்டும் என்பதையே இக்கதைகள் கோடிட்டுக் காடுகின்றன.