dc.description.abstract |
உருவமாகவும் அருவமாகவும் நின்று அண்ட சராசரங்கள் எல்லாவற்றையும் இயக்கும் பரம்பொருளின் ஆடலைப் புலப்படுத்தி நிற்கும் கலைவடிவம் நடனமாகும். இந்நடனவடிவத்தினை கையாள்வதற்குரிய இலக்கண விதிமுறைகளை வகுத்துத் தந்த ஆதி குரு பரதமுனிவர் ஆவார். இப் பரதமுனிவரால்; எழுதப்பட்டதே நாட்டிய சாஸ்த்திரமாகும.; இது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூல் வடிவம.; இந்நூல் நாடக இலக்கணம் பற்றிக் கூற எழுந்த போதும் நாடகத்துடன் தொடர்புடைய இசை நடனம் பற்றிய கருத்துக்களை மிகத் துல்லியமாக எடுத்து காட்டுகிறது. இத்தகைய நாட்டிய சாஸ்த்திரத்தின் அமைப்புக்களைப் பின்பற்றி ஆடப்பெற்ற நடனங்கள், நடிக்கப்பட்ட நாடகங்கள், வரையப்பட்ட ஓவியங்கள், செதுக்கப்பட்ட சிற்பங்கள், போன்ற கலைவடிவங்களில் இந்நாட்டிய சாஸ்த்திரத்தின் இலக்கணம் எவ்வாறு கையாளப்பட்டுள்ளது என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தும். அரச சபையிலோ அல்லது ஆலயங்களிலோ நடன நிகழ்ச்சி இடம் பெறுவதற்கான ஓர் இடம் அல்லது அரங்கு வகுக்கப்பட்டுள்ளது அது 'ரங்க மண்டலம்' எனவும் அது நாட்டிய சாஸ்திர இலக்கண விதிமுறைக்கமைய அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பேராசிரியர் சரச்சந்திரா சுதேச இசை மரபு கண்டிய மன்னர் காலத்தில் ஏற்பட்டது எனக்கூறுகிறார.; இக்காலகட்டத்திலேதான் கண்டிய நடனம் உருவாகிற்று. இதற்கும் பரத நாட்டியத்திற்கும் கதக்களிக்கும் இடையே சில ஒற்றுமை அம்சங்கள் உள்ளன. இவை யாவும் பரத சாஸ்திரத்தினைப் பின்பற்றுதலும் இதற்கான காரணிகளில் ஒன்றாகும்;. நடனம்பற்றி சிற்பங்கள் தரும் சான்றுகளினை விரிவாக உறுதிப்படுத்தும் வகையிலே சமகாலச் சிங்கள இலக்கிய நூல்கள் அமைந்துள்ளன. கி.பி. 13ம் நூற்றாண்டிலே தம்பதெனியாவில் இருந்து ஆட்சி புரிந்த இரண்டாம் பராக்கிரமபாகு இயற்றிய 'கவுசிலிமின' எனும் காவியம் குறிப்பிடப்பாலது. நடன நுட்பங்கள,; நடனக்கலைஞரின், பகட்டான ஆடை அணிகலங்கள், பார்ப்பவரை மயக்கும் கவர்ச்சிகரமான தோற்றம், பேரழகு முதலியன பற்றி இந்நூல் கூறுகிறது. பரதரின் நாட்டிய சாஸ்திரத்தைப் பின்பற்றி கிராம, ராகம், லயம், ஸ்தானம், மூர்ச்சனை, கரணம் போற்றவை பற்றியும் இது கூறுகிறது. அக்கால பரத நாட்டியத்திலே நூற்றெட்டு கரணங்களும் ஓர் முக்கியமான இடத்தினைப் பெற்றிருந்தன என்பதனையும் இது எடுத்துக்காட்டுகின்றது. இத்தகைய தாற்பரியங்களை இலங்கைக் கலைஞர்கள் எவ்வாறு பயன்படுத்தி உள்ளார்கள், இந்நாட்டிய சாஸ்த்திரம் இலங்கைக் கலைஞர்களிடத்தில் எத்தகைய பங்களிப்பினை ஆற்றியுள்ளது என்பதனை எடுத்துக்காட்டுவதே இவாய்வுக்கட்டுரையின் சுருக்கமாக அமைகிறது. |
en_US |