dc.description.abstract |
விளையாட்டாகவும் பரிணமித்திருக்கிறது. இருந்தும் மேலைத்தேய விளையாட்டுக்களான துடுப்பாட்டம், கால்பந்து, வலைபந்து போன்றவற்றின் வருகையினாலும் சமூகங்களுக்கிடையிலான பண்பாட்டு மாற்றங்களினாலும் தமிழர் மத்தியில் நலிவடைந்துபோயுள்ள பாரம்பரிய விளையாட்டுக்களில் கிளித்தட்டும் ஒன்று. தமிழர் தம் பாரம்பரியங்களை, பண்பாட்டு கோலங்களை வெளிப்படுத்தும் இத்தகைய விளையாட்டுக்களைப் பேணிப்பாதுகாப்பதும் அவற்றுக்குப் புத்துயிரளிப்பதும் கடமையாகும். அந்தவகையில், இலங்கையில் வடபுலத்தில் கிளித்தட்டு சிறப்பாக விளையாடப்பட்ட ஊர்களிலுள்ள விளையாட்டுக் கழகங்கள், சனசமூக நிலையங்கள் மற்றும் கிளித்தட்டு விளையாட்டில் பங்குபற்றிய வீரர்களிடம் மேற்கொள்ளப்பட்;ட நேர்காணல்களிலிருந்தும், பாரம்பரிய விளையாட்டுக்கள் தொடர்பாக வெளிவந்துள்ள நூல்கள் மற்றும் சில அறிமுகப் பதிவுக் குறிப்புகளிலிருந்தும் ஆய்வுக்கான தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. வரலாற்று மற்றும் விபரண ஆய்வு முறையியல்கள் கையாளப்பட்டுத் தரவுகள் அலசப்பட்டுள்ளன. அந்தவகையில் இவ்வாய்வுக் கட்டுரையானது கிளித்தட்டு எனும் பாரம்பரிய விளையாட்டைத் தொடர்ந்து பேணுவதற்கான முயற்சியாகவும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அங்கிகாரம் பெறச்செய்வதற்கான தேடலாகவும் அமைகின்றது. |
en_US |