DSpace Repository

மருத்துநீரின் சித்தமருத்துவ மற்றும் அறிவியல் முக்கியத்துவம்

Show simple item record

dc.contributor.author Karunya, S.
dc.contributor.author Charuja, N.
dc.contributor.author Sivagajendran, S.
dc.contributor.author Sathiyaseelan, V.
dc.date.accessioned 2026-11-09T07:56:09Z
dc.date.available 2026-11-09T07:56:09Z
dc.date.issued 2026
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13220
dc.description.abstract தமிழ் மக்கள் இயற்கையைக் கடவுளாகப் போற்றி மதித்ததன் காரணமாக பருவ நிலை மாற்றத்திற்கேற்ப கொண்டாடப்படும் பண்டிகையாக சித்திரைப் புத்தாண்டு விளங்குகிறது. மக்களின் தன்மைகள் நிலத்தை அனுசரித்து மாறுபடுதலன்றி பொழுதிற்கு ஏற்றவாறும் மாறுபாடு அடைகின்றது. பூமி சூரியனைச் சுற்றி வருவதற்கு 12 திங்கள் அதாவது ஓர் ஆண்டு ஆகின்றது. இதனைப் பெரும் பொழுது என்பர். இது கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என 6 பகுதிகளைக் கொண்டுள்ளது. இளவேனில் காலத்தின் (சித்திரை, வைகாசி) தொடக்க நாளாகிய சித்திரை மாதம் முதலாம் திகதி அதாவது சூரியபகவான் மேடராசிக்குள் பிரவேசிக்கும் காலம் சித்திரை வருடப்பிறப்பாகும். இந்நன்னாளில் வருடம் பிறக்கும் விஷ_ புண்ணிய காலத்தில் சகலரும் சங்கற்ப பூர்வமாகத் தலையிலே மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்து புத்தாடையணிந்து இறைவழிபாடாற்றி, பெரியோர்களிடம் ஆசி பெற்று, கைவிசேடம் பரிமாறி, அறுசுவை உணவு உண்டு பாரம்பரிய விளையாட்டுக்ளில் ஈடுபட்டு பண்டிகையைச்சிறப்பாகத் தமிழ்மக்கள்கொண்டாடுவார்கள். இவ்வாய்வின் நோக்கம் மருத்துநீரினை இப்பண்டிகைக் காலத்தில் பயன்படுத்துவதில் உள்ள சித்தமருத்துவ மற்றும் அறிவியல் முக்கியத்துவத்தை ஆராய்வதாகும். இவ்வாய்வு இலக்கிய விளக்கவியல் ஆய்வு முறையியலில் மேற்கொள்ளப்பட்டதுடன் தரவுகள் சித்தமருத்து நூல்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளிலிருந்து தொகுக்கப்பட்டன. மருத்துநீர் என்பது எமது முன்னோர்களால் புத்தாண்டு பிறக்கும் புண்ணிய காலத்தில் உடல் வெப்பம் குறைந்து நோய்கள் தீரவும், தோஷ நிவர்த்திக்காகவும் பல மூலிகைகளை ஒன்று சேர்த்துக் காய்ச்சி தலையிலும் உடலிலும் நீராடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட நீராகும். மருத்துநீரில் தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஸ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம். அறுகு, பீர்க்கு, மஞ்சள், சுக்கு, மிளகு, திப்பலி முதலிய 13 மூலிகைகளும், பால், கோமயம், கோசலம், கோரோசணை ஆகிய 4 உபரசங்களுமாக 17 மூலப்பொருட்களைக் கொண்டுள்ளது. இதில் 3 வகையான பூக்கள், 3 வகையான இலைகள், 3 வகையான முழுத்தாவரங்கள், 2 வகையான மட்டநிலத்தண்டுகள், 2 வகையான உலர் பழங்கள் என்பன பயன்படுத்தப்படுகின்றன. இதில் 50மூ ஆனவை சீத வீரியத்தையும், 50மூ ஆனவை வெப்ப வீரியத்தையும் கொண்டுடிருப்பதால் உடலில் ஏற்படும் தட்ப வெப்ப மாற்றத்தை சமநிலைப்படுத்துகின்றன. இம்மூலப்பொருட்களின் மருத்துவச் செய்கைகளில் கோழையகற்றி (7), வியர்வைபெருக்கி (5), குளிர்ச்சியுண்டாக்கி (4), துவர்ப்பி (4), அகட்டுவாய்வகற்றி (4), வெப்பகற்றி (4) என்பன காணப்படுகின்றன. வெப்ப மிகுதியினால் அம்மை நோய்கள் உருவாவதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைவதனால் தொற்று நோய்களும் இக்காலத்தில் ஏற்படும். உடலின் வெப்பத்தைக் குறைப்பதற்கு வியர்வைபெருக்கி, குளிர்ச்சியுண்டாக்கி, வெப்பகற்றி, வரட்சியகற்றி போன்ற செய்கைகளும், உடல் உரமாக்கி, உடற்றேற்றி, துவர்ப்பி போன்ற செய்கைகள் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்வதற்கும் பயன்படுகின்றன. இளவேனில் காலத்தில் சூரியன் பூமிக்கு அண்மையில் வருவதால் சூழலின் வெப்பநிலை அதிகரிக்கும். இதனால் பின்பனி காலத்தில் மக்களில் தன்னிலை விருத்தியடைந்திருந்த கபம் வேற்றுநிலை விருத்தியடையும். இக்கப மிகுதியினால் பசித்தீ கெட்டு கபப் பிணிகள் உருவாகும். பிளேவினொய்ட், பீனோலிக், ரனின், அல்கலொய்ட், சப்போனின், குக்குமின், ஜின்ஜரோல், பிப்பெரின், அந்தோசயனின், அத்தியாவசிய எண்ணெய்கள் ஆகியன மருத்துநீரில் உள்ள முக்கிய வேதியல் சத்துக்களாகும். இம்மூலப்பொருட்களின் வேதியல் சத்துக்கள் கபப்பிணிகள், பித்த நோய்கள் மற்றும் தோல் நோய்களைக் குணப்படுத்துவதுடன் உடலை வலுப்படுத்தவும், மனதைப் புத்துயிர்ப்படையவும் செய்கின்றன. இந்து சமயம் வெறுமனே நம்பிக்கைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்ட வாழ்வியல் முறை அல்ல. அது அறிவியல் சார்ந்த வாழ்வியல் முறையைக் கொண்டமைந்தது என்பதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாக மருத்துநீர் விளங்குகிறது. en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Hindu Studies University of Jaffna, Sri Lanka en_US
dc.subject மருத்துநீர் en_US
dc.subject சித்த மருத்துவம் en_US
dc.subject அறிவியல் en_US
dc.subject சித்திரைப்புத்தாண்டு en_US
dc.subject தமிழர் வாழ்வியல் en_US
dc.title மருத்துநீரின் சித்தமருத்துவ மற்றும் அறிவியல் முக்கியத்துவம் en_US
dc.type Conference paper en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record