DSpace Repository

பெண்மொழி நோக்கில் வெள்ளிவீதியார் கவிதைகள்

Show simple item record

dc.contributor.author Selvampikai, N.
dc.date.accessioned 2026-09-02T05:43:59Z
dc.date.available 2026-09-02T05:43:59Z
dc.date.issued 2021
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12968
dc.description.abstract அண்மைக் காலங்களில் பெண்ணியம் தொடர்பான கருத்துக்கள் ஆய்வுலகில் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளன. பெண்ணிலைவாத ஆய்வில் பேசப்படும் விடயங் களில் ஒன்றாகப் ‘பெண்மொழி” என்பது அமைகின்றது. பெண் தனது சிந்தனைகளை, உணர்வுகளை, அனுபவங்களை எவ்வித தணிக்கைகளும் இன்றி எடுத்துரைக்கத் தனக்கென ஒருமொழி தேவை எனக் கருதும்போது பெண்மொழி உருவாகின்றது. பெண்களுக்கான கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்ட சூழலில் வாழ்ந்த சங்கப் பெண்பாற் புலவர்களின் படைப்புக்களினூடாகப் பெண்மொழி பற்றிய கருத்துக்களை வெளிக்கொணர்தல் இன்றைய சூழலமைவுக்குப் பொருத்தப்பாடுடையது ஆகும். சங்கப் பெண்பாற் புலவர்களுள் ஒருவராக வெள்ளிவீதியார் விளங்குகின்றார். வெள்ளிவீதியார் அகத்திணைப் பாடல்களை மட்டும் பாடியுள்ளார். வெள்ளிவீதியாரால் பாடப்பட்டதாகப் பதின்மூன்று பாடல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவரது பாடல்கள் உடல்சார்ந்த, உள்மனம் சார்ந்த பாடல்களாக அமைகின்றன. வெள்ளிவீதியார் தலை வனைப் பிரிந்திருந்தமை வரலாற்றுச் செய்தியாகப் பதிவாகியுள்ளது. வெள்ளிவீதியார் பாடல்களில் இடம்பெறும் தலைவியின் புலம்பல்கள் அவரது அனுபவப் பகிர்வுகளாகக் கருதப்படுகின்றன. இந்த ஆய்வானது பெண்மொழி நோக்கில் வெள்ளிவீதியார் கவிதைகளை ஆய்வுசெய்ய முiனைகின்றது. சங்ககாலத்தில் பெண்கள் தமது உணர்வுகளைப் புலப்படுத்தத் தனித்துவமான மொழி ஒன்றைக் கையாண்டுள்ளனரா? என்பது வெள்ளிவீதியார் கவிதைகள் மூலம் ஆராயப்படுகின்றது. வெள்ளிவீதியார் கவிதைகளில் ‘பெண் மொழி பேசப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிதல் இந்த ஆய்வின் நோக்கமாகும். இந்த ஆய் வில் வெள்ளிவீதியார் கவிதைகள் முதன்மை மூலங்களாகக் கொள்ளப்படுகின்றன. பெண்மொழி குறித்த ஆய்வுகள், கட்டுரைகள், வெள்ளிவீதியார் பற்றிய ஆய்வுகள், கட்டுரைகள் போன்றன துணை மூலங்களாகக் கொள்ளப்படுகின்றன. வெள்ளிவீதியார் பாடல்களையும் பாடற் பொருண் மைகளையும் இனங்காணுதல் அவரின் மொழிக்கையாளுகையையும் அதன் தனித்துவத் தையும் கண்டறிதல் ஆகியன இவரது அகக்கவிதைகள் தொடர்பில் கவனிக்கப்பட வேண்டிய பிரச் சினைகள் ஆகும். வெள்ளிவீதியார் கவிதைகள் தொடர்பாக இதுவரை வெளிவந்த ஆய்வுகளை நோக்கும்போது அவரின் வரலாறு, பாடற்பொருண்மையின் சிறப்புக்கள் பற்றிய மரபான பதிவுகளாகவே அமைகின்றன. வெள்ளிவீதியார் அகப்பாடல்களில் பெண்மொழி குறித்துப் பெண் ணிய அணுகுமுறையின் வழியான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே வெள்ளிவீதியார் கவிதைகளைப் பெண்மொழி நோக்கில் ஆய்வுசெய்ய வேண்டியதை இதுவரை வெளிவந்த ஆய்வுகள் உணர்த்து கின்றன. வெள்ளிவீதியார் தமது கவிதைகளில் பெண்மொழி ஒன்றைக் கட்டமைத்திருந்தார் என்பது ஆய்வின் கருதுகோளாக முன்வைக்கப்படுகின்றது. இந்த ஆய்வு விவரணமுறையியல் ஆய்வினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆய்வில் பகுப்பாய்வு அணுகுமுறை, ஒப்பீட்டு அணுகுமுறை, பெண் ணிலை ஆய்வு அணுகுமுறை ஆகியன பின்பற்றப்படும். ‘பெண்மொழி' தொடர்பான கருத்துக்கள் முனைப்புப்பெற்றுவரும் தமிழ் இலக் கியச் சூழலில் முதல் தமிழ் இலக்கியப் படைப்பாளராகக் கருதப்படும் சங்ககாலப் பெண்கவிஞர் களில் ஒருவரான வெள்ளிவீதியார் கவிதைகளைப் பெண்ணிய அணுகுமுறையின் வழி ஆய்வுக் குட்படுத்த வேண்டிய தேவை உள்ளது. சமகாலத்தில் பேசப்படும் பெண்மொழி பற்றிய கருத்து நிலைகள் தோன்றுமுன்பே சங்கப் பெண்கவிஞர்கள் தமக்கென் ஒரு பெண்மொழியை உரு வாக்கிவிட்டனரா? என்பது ஆய்வின் மூலம் கண்டறியப்படும். en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.subject வெள்ளிவீதியார் en_US
dc.subject பெண்மொழி en_US
dc.subject அகப்பாடல் en_US
dc.subject பெண் en_US
dc.subject அனுபவ உணர்வு en_US
dc.title பெண்மொழி நோக்கில் வெள்ளிவீதியார் கவிதைகள் en_US
dc.type Conference paper en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record