| dc.contributor.author | Arulmozhiselvan, N. | |
| dc.contributor.author | Ragunathan, M. | |
| dc.date.accessioned | 2026-08-24T09:37:02Z | |
| dc.date.available | 2026-08-24T09:37:02Z | |
| dc.date.issued | 2023 | |
| dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12910 | |
| dc.description.abstract | ஒரு காலத்தின் இலக்கியத்தினைக் கொண்டு அது தோன்றிய காலத்தின் வரலாறு. கருத்தியல் அடைவு ஆகிய இரு கருதுகோள்களையும் உள்ளடக்கி, அந்த இலக்கியம் தோன்றிய நாட்டினது அன்றேல் அம்மக்கட் கூட்டத்தினரது இலக்கிய உற்பத்தி, விநியோகம். நுகர்வு என்பவற்றை அடியாகக்கொண்டு அக்கால மக்களின் வாழ்வியல் அம்சங்களையும் அதன் பகைப்புலங்களையும் கோட்பாட்டு நிலையில் நின்று அறிந்துகொள்ளும் நோக்கில் ஏலாதியை அடிப்படையாகக் கொண்டு அதன் அற ஒழுக்கவியல் கருத்துக்கள் ஆராயப்படுகின்றன. ஏலாதி மனதுக்கும் உடலுக்கும் வலிமை சேர்க்கும் பண்புசார்ந்த அற இலக்கியமாகும். இந்நூலின் ஆசிரியர் சமணசமயத்தைச் சார்ந்த கணிமேதாவியார் ஆவர். ஆறு மூலிகைகளைக் கொண்ட ஏலாதி என்னும் மருந்துச் சரக்கினைப் போன்று உளநோயைத் தீர்க்கும் ஆறு அற ஒழுக்கக் கருத்துக்களை உள்ளடக்கிய 82 பாடல்கள் இந்நூலில் உள்ளன. பேசுகின்ற பொருளால் வெளிப்படுத்தப்படுகின்ற அழகியல் முறையினால் வரலாற்றிலிருந்து நீக்கிவிட்டுப் பார்க்கமுடியாதளவுக்கு இந்நூல் தன்னை நிறுவியுள்ளது. குறித்தகருத்துக்களைக் கட்டமைப்பதுடன் அவற்றைக் கேள்விக்குள்ளாக்குவதாகவும் அதிகாரப்பட்டிருக்கும் கருத்துக்களுக்கெதிரான குரல்களாகவும் அறக் கருத்துக்களை முன்வைத்துள்ளது. இந்நூல் இலக்கியமரபில் எத்தகையவகிபங்கைப் பெறுகின்றது? என ஆராயும் முகமாக இக்கட்டுரை அமைகின்றது. இந்த ஆய்வில் வரலாற்றுமுறையியல். விவரணமுறையியல் என்பன ஆய்வுமுறையியல்களாக அமைந்துள்ளன. | en_US |
| dc.language.iso | other | en_US |
| dc.publisher | University of Jaffna | en_US |
| dc.subject | கணிமேதாவியார் | en_US |
| dc.subject | கருத்தியல் | en_US |
| dc.subject | தத்துவங்கள் | en_US |
| dc.subject | அறம் | en_US |
| dc.subject | வாழ்வியல்நெறி | en_US |
| dc.subject | ஒழுக்கவிதிகள் | en_US |
| dc.title | வரலாற்று நோக்கில் அற ஒழுக்கவியல் கருத்துக்கள் ஏலாதியை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு | en_US |
| dc.type | Conference paper | en_US |