| dc.description.abstract |
மனிதம் சமூகத்தில் மற்றவருடன் இணைந்து வாழ்வதற்கு கல்வி துணையாகவுள்ளது. கல்வியே மனவளர்ச்சியையும், பண்பாட்டுப் புரிதலையும், புரிந்துணர்வையும் மனிதர்களுக்கு வழங்குகின்றது. பண்டைக்காலத்தில் பள்ளிக்கல்வி முறையோ. ஏட்டறிவுக்கல்வி முறைகளோ முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. கேட்டல், உணர்தல், சிந்தித்தல். கற்றல் என்ற செயற்பாடுகளினூடாகவே மக்கள் கல்வியறிவைப் பெற்றுக்கொண்டனர். இது சமுதாயத்தில் அவன் மற்றவர்களுடன் இணைந்து வாழ்ந்ததால் பெற்றுக்கொண்ட பட்டறிவாகும். காலப்போக்கில் கல்வி வணிகமயப்படுத்தப்பட்டு பொருளாதாரத்தை ஈட்டும் கருவியாக்கப்பட்டது. இந்நிலையில் நூலறிவு முதன்மையானது. ஆனால் இது செயற்கை அறிவாகக் கருதப்பட்டது. கல்வியின் மூலமே மனிதன் சமூகமதிப்பைப் பெற்றுக்கொள்கின்றான். மன்னர்களைவிட மாசறக் கற்றோனுக்கு வழங்கப்படுகின்ற உயர்வு கல்வியினாலேயே என்பதால் கற்றல் நன்றே என்று பண்டுதொட்டு இன்றுவரை அறநூல்களும், கற்றறிந்தோரும் வலியுறுத்திவருகின்றனர் |
en_US |