| dc.description.abstract |
தமிழ் மொழியின் பழமையான இலக்கியங்கள் அரிய கருத்துக்களையும் உயர்ந்த பண்புகளையும் எடுத்துக்காட்டுகின்றன. மனிதனுடைய அறப்பண்புகள் எண்ணம், சொல், செயல் மூன்றிலும் வெளிப்படும் ஆயினும் காலச்சூழற்பண்பு மாற்றத்திற்கு வழிவகுத்துவிடும் என்பதால் இலக்கியங்கள் தொடர்ந்து அறத்தை வலியுறுத்தி வந்துள்ளன. தமிழர் பண்பாட்டில் அறம், ஒழுக்கம், கல்வி, விருந்தோம்பல், இன்னாசெய்யாமை
போன்றன உயரிய பண்பாட்டுக்கூறுகளாகவே காணப்பட்டன. இவற்றில் தமிழரின் ஒழுக்க நெறிமுறைகளிலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்குவது விருந்தோம்பற் பண்பாடாகும். இதனை அறங்களின் தலையாய அறமென திருவள்ளுவர் எடுத்தியம்பியுள்ளார். பண்டைய தமிழரின் வரலாற்றில் தலையானது விருந்தோம்பலாகும். பசிப்பிணி போக்குவதனையே முதன்மை நோக்கமாகக் கொண்டு வாழ்ந்த பெருமை தமிழ்ச் சமூகத்திற்கு
உரித்துடையதாகும். அவ்வகையில் தமிழர் பண்புகளில் நம்மால் மறைக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட பண்புகளில்உன்றாக விருந்தோம்பல் அமைகின்றது. இவ்வகையான பண்பாட்டுக் கூறானது தற்போதைய தமிழ் சமூகத்தினரிடையே அருகி வருவதனைக் காணக்கூடியதாக உள்ளது. அவ்வகையில் தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பல் எனும் இவ்வாய்வானது சங்கமருவியகால பதினெண்கீழ்கணக்கு நூல்களில் அறம் தழுவிய இல்வாழ்க்கைப் பண்பாட்டை வலியுறுத்தும் திருக்குறள் ஆசாரக்கோவை போன்ற நூல்கள் சுட்டிக்காட்டும் விருந்தோம்பற் பண்பாடு பற்றிய கருத்துக்களை ஆராய்வதாக அமைகிறது. விருந்தோம்பலின் சிறப்புக்களையும் முக்கியத்துவத்தினையும் மக்களிமையே எடுத்துணர்த்தும் நோக்கிலும் தமிழர்களிடையே நலிவுற்று வரும் விருந்தோம்பற் பண்பாட்டை வலுப்பெறச்செய்வதனையும் நோக்காகக் கொண்டு இவ்வாய்வானது மேற்கொள்ளப்படடுள்ளது. ஆய்விற்கான தரவுகள் நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள் மூலமாகப் பெறப்பட்டு பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. |
en_US |