Abstract:
நாடகபாடம் என்பது (Dramatic Text) என்பது நாடக ஆற்றுகையின் கூறுகளில் ஒன்றாகும். அவை உருவாக்கப்படும் முறைமையில் காலத்திற்குக்காலம் அரங்கவடிவங்களின் வேறுபாடுகளிற்கேற்ப்ப அவை தனது வடிவத்தினை நாடகபாடம் அதன் கட்டமைப்பினை வடிவமைத்துக் கொள்ளும். அந்தவகையில் கோபாலக்கிருஸ்ணபாரதியாரின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் என்ற நாடகபாடம் இசைநாடகமாக அளிக்கை செய்வதற்காக 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகும். இசை நாடகங்களின் தோற்றம் 19ஆம் நூற்றாண்டில் பாசி அரங்கமரபுகளும் மற்றும் உள்ளூர் இசை, நாடகங்கள், ஏனைய ஆற்றுகை மரபுகளினதும் கலப் பொட்டாக தமிழில் அறிமுகமாகிய அரங்க வடிவமாகும். இவற்றில் தனித்துவமான பண்புகள் கொண்ட பல்வேறு இசைவடிவங்களும் இசை நாடகங்களின் உருவாக்கத்திற்குப் பயன் படுத்தப்பட்டுள்ளன. நாடக முழுமைக்கு இந்த இசைவடிவங்களின் பங்கு என்ன என்பதனை நந்தனார் சரித்திரக்கீர்த்தனைகளை அடிப்படையாகக் கொண்டு இவ்ஆய்வு விளக்க முற்படுகிறது. இசைநாடகங்களின் வரலாறு மற்றும் அவற்றின் சமூகவியல் ரீதியான நோக்கில் ஆய்வுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆயினும் அவற்றின் அரங்கியல் அம்சங்கள் தொடர்பான ஆய்வுகளின் தேவை அரங்கில் ஈடுபடுபவைகளுக்கு மிகவும் அவசியமானதாகும். அந்த வகையில பாத்திர உருவாக்கம், காட்சிப் படிமங்களின் உருவாக்கம், உணர்ச்சி வேறுபாடுகளை உருவாக்குதல் என்பவற்றிற்கு இசைவடிவங்களின் தனித்துவமான இயல்புகள் எவ்வாறு கூட்டு அனுபவமாக இசைநாடகத்தில் வெளிப்படுகிறது என்பது தொடர்பாக நாடக பாடத்தினை அடிப்படையாகக் கொண்ட அறிதலாக இவ் ஆய்வு அமைகிறது. "இந்திய அரங்கமரபில் (Convention of stage) நாடகங்களை மேடையேற்றுதல் என்பது குறிப்பிடத்தக்க செயற்பாடாகும். அரங்க எழுத்துருக்களைப் பொறுத்தவரை அவை அரங்கச் செயலின் (Presentation) பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு புறவுருவம் (Configuration) ஆகும்." (கபிலவாத்சாயனர், 1968-24)