dc.description.abstract |
தமிழில் தோன்றிய இலக்கியங்களில் சமயம் சார்ந்தவை என்ற வகையில்
காப்பியம் குறிப்பிடத்தக்கது. சங்கமருவிய காலத்தில் எழுந்த பெருங்காப்பியமான மணிமேகலை இலக்கியமானது தமிழ் பௌத்தப் பரவலாக்கத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது. இந்தியாவில் அக்காலச் சூழலில் மக்கள் மத்தியில் அறம் போதிக்க வேண்டிய
போதிக்க வேண்டிய தேவை உணரப்பட்டு கூலவாணிகன் சாத்தனாரால் பௌத்த அறம் முன்வைக்கப்பட்டது. நூலில் சிறந்த இலக்கிய இரசனையூடாகவும் நல்ல கதாபாத்திரங்களினூடாகவும் உப கதைகள் மூலமாகவும் பௌத்த தத்துவக் கருத்துக்கள் எளிமையான முறையில் கூறப்பட்டுள்ளன. புத்தரையும் புத்த மதக்கொள்கைகளையும் பாராட்டி நிற்பது இவ் இலக்கியத்தின் சிறப்பம்சமாகும். மணிமேகலை என்ற பெண்ணே பௌத்த சமயத் துறவியாகிறாள். பௌத்த தத்துவார்த்த கருத்துக்களான பிறப்பு நிலையாமை, நல்வினை தீவினை, துன்பம், துறவு, துறவுக்கான வழிகள், பஞ்சசீலக் கொள்கைகள், ஊழ்வினைக் கோட்பாடு, மறுபிறப்பு, பன்னிரு நிதானங்கள் என்பன பரவலாக்கம் செய்யப்பட்டள்ள விதத்தை முன்வைப்பதே இவ் ஆய்வின் நோக்கமாகும். இன்று தமிழ் பௌத்த நகர்வு பற்றிய சிந்தனையும் ஆராயப்பட வேண்டியதே. இவ்வகையில் விபரண ஆய்வு, பகுப்பாய்வு முறைகள் கையாளப்படுகின்றன. |
en_US |