dc.contributor.author | Dinosha, S. | |
dc.date.accessioned | 2025-10-11T07:58:00Z | |
dc.date.available | 2025-10-11T07:58:00Z | |
dc.date.issued | 2018 | |
dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11623 | |
dc.description.abstract | பெண் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத் தில் பெண்களுக்கான வாக்குரிமை போராட்டம் ஒரு முக்கிய மான ஆரம்பப் புள்ளியாகும். வாக்குப் பலத்தால் பெண்களும் ஒரு நாட்டின் அரசியலைத் தீர்மானிப்பதற்கு உரித்துடைய வர்கள் ஆகிறார்கள். ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமாயின் பெண்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று ஆணாதிக்க அரசியல்வாதிகளை எண்ண வைப்பது பெண்களுக்கு உள்ள வாக்குரிமை. பெண்களுக்கான வாக்குரிமை இலகுவில் கிடைத்த ஒன்றல்ல. பல நீண்டகாலப் போராட்டங்களின் விளைவாகவே அது அடையப்பட்டது. ஆனால் இந்த உரிமை குறிப்பாகத் தமிழ்ப் பெண்களால் உரியமுறையில் பயன் படுத்தப்படுகிறதென கூறமுடியாது. நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பிலிருந்து பிரச்சார நடவடிக்கைகள் உள்ளீடாக பெண்கள் இரண்டாம் பட்சமாகவே நடத்தப்பட்டனர். தேர்தல் சட்டத்தின் படி 25 வீதமான ஆசனங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டும் அவர்களின் பிரதிநிதித்துவம் அந்த அளவிற்கு எட்டப்படவில்லை. பெண் வேட்பாளர்கள் இரண்டாம் நிலைப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். சில பெண் வேட்பாளர்கள் பய முறுத்தப்பட்டனர். சிலர் சமூகவலைத்தளங்களினூடாக பாலியல் ரீதியில் கேலி செய்யப்பட்டனர். இந்த நிலை இனியும் தொடராமல் இருக்க வேண்டுமாயின் தமிழ் பெண்கள் அரசியல் விழிப்படைய வேண்டியது அவசியம். தமது வாக்குரிமையை தமது விடுதலைக்குப் பயன்படும் வகையில் உபயோகிக்க வேண்டும். | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | நிமிர்வு | en_US |
dc.title | ஈழத் தமிழ் பெண்கள் கடந்து வந்த பாதை | en_US |
dc.type | Article | en_US |