Abstract:
ஜனநாயக உரிமையோடுநோக்கப்படும் விடயமாக 'தமிழ்த்தேசியம்'
அமைந்துள்ளது. பொதுவாக 'தேசியவாதம்' என்பது தேசங்களின் சுயநிர்ணய உரிமை (Right of self, - Determination of Nations) என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய உரிமையின் அடிப்படையில் அரசுகளும் தேசிய இனங்களும் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். இருப்பினும் இத்தகையதோர் ஒழுங்கமைப்பு இலங்கை அரசியலமைப்பில் இல்லாத நிலையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் என்பதுமிகக் குறைவாகவே காணப்படுகின்றது. இத்தகைய நிலையில் பெண்களுக்கான சமத்துவ உரிமை குடும்பம் தொடக்கம் அரசியல் வரை மறுக்கப்படும் சூழலே காணப்படுகின்றது. குறிப்பாக தமிழ்தேசிய அரசியலில் வடமாகாணத்தில் அரசியலில் ஈடுபடும் பெண்கள் தொடர்பான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பெண்களின் அரசியல் ஈடுபாட்டை அதிகரிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடிவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாக இந்த ஆய்வு ஆராய்கிறது. பண்புசார் தகவல்களின் அடிப்படையில் தொகுத்தறிமுறையைப் பயன்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்கள் சமமாக நடத்தப்படுவதற்கு பெண்களின் அரசியல் வருகை அதிகரிக்கப்படவேண்டும். அதற்கு அரசியல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
வேண்டும். அரசியல் மற்றும் ஜனநாயக உரிமையை வேண்டி நிற்கும் ஒரு இனம் பெண்களின் உரிமைதொடர்பாக அவர்களின் அரசியல் பங்குபற்றுதல் தொடர்பாகக் கொண்டிருக்க வேண்டிய விடயங்கள் பற்றியும் இந்த ஆய்வு ஆராய்கிறது. ஆதன வழி எதிர்காலத்தில் பெண்கள் தமிழ்தேசிய அரசியலில் தமக்கென ஓர் அடையாளத்தை எவ்வாறு நிலைநாட்ட முடியும் என்பதையும் ஆராய்கிறது.