Abstract:
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் சிறப்புற்றிருந்த அமெரிக்க மிஷனரிமாரால் 1841இல் உதயதாரகை என்ற பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இவ் ஆரம்பமானது இலங்கைத் தமிழ்ப் பத்திரிக்கைத் துறைக்கு அடித்தளமாக அமைந்து கொண்டது. ஆங்கிலத்தில் "The Morning Star” என்றும் தமிழில் உதயதாரகை என்றும் இப்பத்திரிக்கை இருமொழிகளிலும் வெளிவந்தது. தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் இப்பத்திரிக்கையானது வெளிவந்திருந்தபோதிலும் தமிழர் மொழியின் சிறப்பே இதன் வளர்ச்சிக்கு மூலமாக இருந்தது. அதாவது தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் இவற்றினூடாக வளர்ச்சி கண்டதெனலாம். இப்பத்திரிகையின் மூலமாக தமிழ் இனத்தின் வரலாறு வெளிக்கொணரப்பட்டது. "இலங்கைத் தமிழ்ப்பத்திரிகை வளர்ச்சியில் உதயதாரகையின் வகிபாகம்" என்பது இவ் ஆய்வின் ஆய்வுப் பொருளாக அமைகின்றது.