Abstract:
ஐரோப்பியர் வருகையும்இவட இலங்கைப் பெண்களின் வாழ்வியலில் ஏற்பட்ட மாற்றங்களும் ஒரு வரலாற்று பார்வை என்ற தலைப்பில் அமையப் பெறுகின்றது. இலங்கை நாடானது இந்து முத்திரத்தின் மத்தியில் தனக்கென ஒரு தனித்துவத்தை பேணிவருகின்ற நாடாகும் 1505 ஆம் ஆண்டினை தொடர்ந்து இலங்கையில் ஐரோப்பியர்களான போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் போன்றவர்களின் மேலாதிக்கத்தின் கீழ் இலங்கை கொண்டு வரப்பட்டது. ஐரோப்பியரின் ஆட்சியின் கீழ் இலங்கையில் பல்வேறுபட்ட மாற்றங்கள் ஏற்பட்டன. அந்த வகையில் இவர்களின் வருகையினால் வடஇலங்கை பெண்களின் வாழ்வியலிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்பட்டது. அந்த மாற்றங்களை ஆராயும் முகமாக இவ்வாய்வுக் கட்டுரையானது அமையப்பெறுகின்றது. இவ்வாய்வின் நோக்கங்களாக பின்வருவன அமைகின்றன. ஐரோப்பியர் வருகையின் முன்னர் தமிழ் பெண்களின் வாழ்வியல் இறுக்கமான சமூக கட்டமைப்பின் கீழ் எவ்வாறு இருந்தது என்பதை கண்டறிதல் . ஐரோப்பியர் வருகையின் பின்னர் வட இலங்கை தமிழ் பெண்களின் இறுக்கமான வாழ்வியல் கட்டமைப்பில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டன. என்பதை கண்டறிதல் இவ்வாய்வின் பிரதான நோக்கமானது ஐரோப்பியர் வருகையினால் வட இலங்கைப் பண்களின் வாழ்வியல் எத்தகைய மாற்றங்களினை ஏற்படுத்தியது என்பதனை எடுத்துக்காட்டல். வட இலங்கை பெண்களின் வாழ்வியலில் ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் இருந்ததை விட பல்வேறு வகையில் முன்னேற்றம் அடைந்திருந்தது என்பதே இவ்வாய்வின் கருதுகோளாகும். இவ் ஆய்வானது வரலாற்று ஆய்வு முறை, விபரண ஆய்வு முறை, ஆகிய ஆய்வு முறையியல்களைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது. இவ் ஆய்வானது (1505- 1948)ஆண்டு வரையிலான காலப்பகுதியில், வட இலங்கையினை எல்லையாககொண்டு மேற்கொள்ளப்படுகின்றது. ஐரோப்பியர் காலத்தில் வடஇலங்கை பெண்களின் அடையாளத்தை அறிந்து கொள்வதற்கும் அரசியல் பொருளாதார சமூக நிலைமைகளில் வடஇலங்கை பெண்களின் வாழ்வியல் எவ்வாறு மாற்றமடைந்தது என்பதை கண்டறிவதற்கு இவ்வாய்வு பயன்படுகிறது.