Abstract:
நோக்கம்: சுற்றுலா துறையானது இன்று வளர்ச்சியடைந்த நாடுகளில் மட்டுமின்றி
வளர்முக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கான உள்ளார்ந்த ஆற்றலை
கொண்டிருக்கும் ஒரு துறையாகும். இருந்த போதிலும் சுற்றுலா துறையின்
விருத்தியினால் உலக மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறுபட்ட சவால்களில்
சூழல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் முக்கியமானவையாக
அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. நயினாதீவுக்கு அதிகளவிலான சுற்றுலா
பயணிகள் வருடாந்தம் யாத்திரைக்காக வருகை தருகின்றனர். இந்த சுற்றுலா
பயணிகளின் வருகைகளால் அங்கு வாழும் மக்கள் எவ்வாறான சூழல் மற்றும்
சமூக பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் என்ற வினாவுக்கு
முந்தைய ஆய்வு அறிக்கை விடை காண தவறியுள்ளது. இந்த வகையில்
இவ்வாய்வின் நோக்கமானது நயினாதீவு பிரதேசத்தின் மக்கள் சுற்றுலா துறையின்
விருத்தியினால் எதிர்நோக்குகின்ற சூழல் மற்றும் சமூக பிரச்சினைகளை
அடையாளம் காண்பதாகும்.
ஆய்வு முறயியல்: அவதானம் மற்றும் நேர்காணல் மூலமாக இவ்வாய்வுக்கான
முதலாம் நிலை தரவுகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக நயினாதீவு பிரதேசத்தில் வாழும் ஆய்வுத் தலைப்போடு தொடர்புடைய
சில நபர்களுடன் இடம்பெற்ற நேர்காணல் ஊடாகவும் ஆய்வுக்குத் தேவையான
தகவல்கள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டது.
ஆய்வின் கண்டுபிடிப்புக்கள்: ஆய்வு பகுப்பாய்வின் மூலம் சுற்றுலாதுறையின்
விருத்தியினால் சூழல் மாசடைகின்றமை, உள்ளூர்வாசிகளின் அன்றாட கடல்
போக்குவரத்து பாதிப்படைகின்றமை, தொன்மையான கட்டடத்தில் சிதைவுகள்
ஏற்படுகின்றமை மற்றும் கலாச்சார சீர்கேடுகள் ஏற்படுகின்றமை, அதிகளவான
சுற்றுலா பயணிகளின் வருகையினால் உள்ளூர்வாசிகளின் கடல் போக்குவரத்து
பாதிப்படைகின்றமை மற ;றும் சுற்றுலா பயணிகள் வருகையினால் சமூக
நல்லிணக்கம் சீர்குலைகின்றமை, சுற்றுலா பயணிகளின் வருகையினால் சூழல்
மாசடைகின்றமை மேலும் சுற்றுலாப் பயணிகளின் அதிகளவான வருகையினால் வெவ்வேறு இடங்களை சேர்ந்தோர் உள்ளூரில் தங்களுடைய வியாபாரத்தினை
மேற்கொள்வதினால் உள்ளூர்வாசிகளின் வியாபாரம் பாதிப்படைகின்றமை போன்ற
பிரச்சினைகள் அடையாளப்படுத்தப்பட்டன.
ஆய்வின் வரையறைகள்: நயினாதீவானது பரந்த பிரதேசமாக காணப்படினும்
முக்கியமான சில சுற்றுலா மையங்களே காணப்படுவதினால் அது சார்ந்த
இடங்களில் மட்டுமே அவதானம மூலம் தரவுகளை பெற்றுக்கொள்வதில் வரையறைகள் காணப்பட்டன. மேலும் சுற்றுலா துறையில் தாக்கம் செலுத்தும்
உள்ளூர்வாசிகள் மற்றும் வியாபாரிகளிடம் நேர்காணலை மேற்கொள்வதிலும்
வரையறைகள் காணப்பட்டன.
ஆய்வின் முக்கியத்துவங்கள்: இவ்வாய்வின் முடிவுகள் சுற்றுலா பயணிகள்
மற்றும் உள்ளூர் வாசிகளிடம் ; விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் சுற்றுலா சார்ந்த
சமூக மற்றும் சூழல் பிரச்சினைகளை தீர்த்து சுற்றுலாசார் சூழல் மற்றும் கலாச்சார
இடங்களை பாதுகாப்பது தொடர்பாகவும் பரிந்துரை செய்கின்றது. மேலும்
இவாய்வின் முடிவானது கொள்கை வகுப்பாளர்கள், முதலீட்டாளர்கள்,
உள்ளூர்வாசிகள் போன்றோர் சுற்றுலா ரீதியான அபிவிருத்தி செய்வதில்
பங்களிப்பு செய்கின்றது.