Abstract:
நோக்கம்: சுற்றுலாத்துறையில் புத்துணர்ச்சியையும் அனுபவங்களையும்
வழங்குவதில் கடல்சார்ந்த அம்சங்கள் இலக்கு மையங்களாக திகழ்வதைக்
காணலாம். அவ்வகையில் நெடுந்தீவு கடற்கரை சார்ந்த பல்வேறு சுற்றுலா
அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ள பிரதேசமாக இருப்பினும் அதிகளவான
சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுப்பது முக்கிய பிரச்சினையாக காணப்படுகின்றது
. எனவே நெடுந்தீவில் கடல்சார் சுற்றுலா அபிவிருத்தி அடையாமல் இருப்பதற்கு
எவ்வாறான காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன என்பதை கண்டறிவதே இந்த
ஆய்வின் முக்கிய நோக்கமாகும்.
ஆய்வு முறையியல்: இவ்வாய்வானது முதலாம் நிலைத் தரவினைப் பயன்படுத்தி
பண்புசார் ஆய்வு முறைகளைப் அடிப்படையாகக் கொண்டு
மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதன்னிலைத் தரவுகள் நேரடி அவதானம ;,
நேர்காணல் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்டுள்ளன. ஆய்வுப் பிரதேச
பொதுமக்கள், உள்ளுர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாத்துறை
பிரயாணிகள் ஆகியோரிடம் நேர்காணல்கள் மற்றும் அவதானம் மூலமும் தரவுகள்
சேகரிக்கப்பட்ட பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளன.
ஆய்வின் கண்டுபிடிப்புகள்: சுற்றுலா ரீதியான முறையான வசதிகள்
ஏற்படுத்தப்படாமையும், போக்குவரத்து வசதி இல்லாமையும், கடற்கரை சார்ந்த
பகுதிகளில் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாமையும், சுற்றுலா
வழிகாட்டிகளுக்கு இப்பிரதேசம் பற்றிய தெளிவின்மையும், கடற்கரை விடுதிகள்,
இளைப்பாறும் இடங்கள்,கடற்கரை களியாட்டங்கள், கடற்கரை சாகச
விளையாட்டுக்கள் போன்றன கட்டமைக்கப்படாமையும் போன்ற காரணிகளால்
நெடுந்தீவில் கடல்சார் சுற்றுலாவானது அபிவிருத்தி அடையாமல்
காணப்படுகின்றது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆய்வின் வரையறைகள்: நெடுந்தீவானது அதிகளவு கடற்கரை வளங்களை
கொண்டிருப்பினும் குறித்த சில பிரதானமான கடற்கரை வளங்களை சார்ந்த
சூழலில் மட்டுமே தரவுகளை பெற்றுக் கொள்வதற்கான ஆய்வின்
வரையறைகள் காணப்பட்டது. சுற்றுலா பயணிகளிடம் நேர்காணலை
மேற்கொள்ள சென்றபோது குறைந்தளவான சுற்றுலா பயணிகளே வருகை
தந்திருந்தமையினால் அதிகளவான தரவுகளை திரட்ட முடியாமல் போனமை
ஆய்வின் முக்கியமான வரையறைகள் ஆகும்.
ஆய்வின் முக்கியத்துவங்கள்: இம் முடிவுகளின் அடிப்படையில் கடல்சார் சுற்றுலா
வளர்ச்சியை அதிகரிப்பதற்காக அரசாங்கமானது சுற்றுலாத்துறையில் தனியார்
மற்றும் அரச முதலீடுகளை ஊக்குவிப்பதன்டி மூலமும் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதன் மூலமும், சுற்றுலாத் துறையின் பங்களிப்புக்களை அதிகரிக்க
வேண்டும் என்று இவ்வாய்வானது வலியுறுத்துவதுடன் பய்படுத்தப்படாத
சுற்றுலாவளங்களை பயன்படுத்துவதன் மூலம் சுற்றுலா வளர்ச்சியை
தூண்டுவதற்கு பேரினபொருளாதார கொள்கைகள் இலங்கையில் வகுக்கப்பட
வேண்டும் என்றும் பரிந்துரை செய்கின்றது. மேலும் இவ் ஆய்வின் முடிவானது
கொள்கை வகுப்பாளர்கள், முதலீட்டாளர்கள், உள்ளூர்வாசிகள் போன்றோருக்கு
சுற்றுலா ரீதியான அபிவிருத்தி செய்வதில் பங்களிப்பு செய்கின்றது.