Abstract:
இருபதாம் நூற்றாண்டில் தோற்றம்பெற்ற முறையியற் சிந்தனையாளர்களுள் தோமஸ் கூன் குறிப்பிடத்தக்க ஒருவராவார். விஞ்ஞானத்தை வரலாற்று ரீதியாக ஆராய்ந்து, அதன் அறிவு வளர்ச்சி மற்றும் அதனூடான புரட்சி பற்றித் தெளிவுபடுத்திக் கட்டளைப்படிம மாற்றம் பற்றிய முறையியற் சிந்தனையை வெளிக்கொணர்ந்தார். குறிப்பாக, கூனின் கட்டளைப்படிம மாற்றம் (Paradigm Shift) பற்றிய முறையியற் சிந்தனை விஞ்ஞான வளர்ச்சியில் புரட்சிகரமான மாற்றத்தினை
ஏற்படுத்தியிருந்தன.
கூன், விஞ்ஞான வரலாறு தொடர்பாக நிகழ்த்திய ஆய்வுகளில் சார்புவாதச் சிந்தனையை விருத்திசெய்து அதிலிருந்து கட்டளைப்படிம மாற்றம் பற்றிய முறையியற் சிந்தனையை வெளிக்கொணர்ந்தார். இம்முறையியல் மூலம் இதுவரை காலமும் விஞ்ஞான வரலாற்றில் நிலவி
வந்த "மாறாத உண்மை" என்ற கருத்தாக்கம் நிராகரிக்கப்பட்டது. வரலாற்று நோக்கில் ஒருமைவாதம் எவ்வாறு பின்னவீனத்துவத்தின் மையக்கருத்தான பன்மைவாதத்திற்கு இட்டுச் சென்றது
என்பதைக் கூனின் விஞ்ஞான வரலாறு மற்றும் அறிவு வளர்ச்சி தொடர்பான ஆய்வுகளிலிருந்து
விளங்கிக்கொள்ளலாம்.
உண்மையானது
கூனினுடைய நோக்கில், விஞ்ஞானத்தில் புதிதாக வெளிக்கொணரப்படும் கொள்கை அல்லது விதி) மாற்றமடையும் போக்கினைக் கொண்டதாகும். இக்கருத்தியலின் பின்னணியிலேயே கூன், கட்டளைப்படிம மாற்றம் பற்றிய முறையியற் சிந்தனையை விளக்குகின்றார். இம்முறையியல் புரட்சிகரமான மாற்றத்தினை ஏற்படுத்தியதோடு புத்தாக்க சிந்தனையையும் உருவாக்கியிருந்தது.
கூனினுடைய முறையியற் சிந்தனை பின்வரும் இரண்டு வினாக்களை அடிப்படையாகக்கொண்டு
விளங்குகின்றன;
1. விஞ்ஞானக் கொள்கைகள் ஏன் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன? 2. ஏன் விஞ்ஞானக் கொள்கைகள் மாற்றீடு செய்யப்படுகின்றன?
விளக்கங்களையும்
கண்டடைவதை
கொள்கைகள்
விஞ்ஞானம் தர்க்கபூர்வமான முடிவுகளையும், நோக்கமாகக்கொண்டு இயங்குகிறது. இதன்மூலம் புதிய உண்மைகள், வெளிக்கொணரப்பட்டு விஞ்ஞானிகள் சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள் காலப்போக்கில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மூலம் வலுவிழந்து செல்ல, புதிய கொள்கைகள் தோற்றம்பெறுகின்றன. இதனால் விஞ்ஞானம் வளர்ச்சியடைந்து செல்வதோடு அறிவும் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய செல்நெறிப்போக்கினை அடிப்படையாகக்கொண்டே கூன் தமது முறையியற் சிந்தனையைத் தெளிவுபடுத்தி விருத்திசெய்தார்.