dc.description.abstract |
பல நாடுகளின் கலாசார, அந்நிய செலாவாணியில் சக்தி வாய்ந்த துறையாக இது இயங்கி வருகின்றது. அந்தவகையில் இலங்கை சமீப காலமாக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் சுற்றுலாத் தளமாக மாறிக்கொண்டு வருகின்றது. இதற்கு நாட்டின் அமைவிடம், இயற்கை அழகு மற்றும் கலாசாரம் போன்ற காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. “சிறிய இங்கிலாந்து” என்று அழைக்கப்படும் நுவரெலியா மாவட்டம் இலங்கையின் சுற்றுலாத்துறையின் பிரதான மைய இடமாகும். தலவாக்கலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள வளர்ச்சியடைந்த சுற்றுலாத் தளங்களை விடவும் அதிக வளவாய்ப்புகளைக் கொண்டு
பல சுற்றுலாத் தளங்கள் இன்றும் அடையாளப்படுத்தப்படாமல் காணப்படுகின்றன. இதனைக்கருத்திற் கொண்டு தலவாக்கலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கு நிலையில் காணப்படும் சுற்றுலா மையங்களை இனங்கண்டு, எதிர்கால சுற்றுலாத் தளங்களுக்கான வளவாய்ப்புகளைக் கொண்ட இடங்களை அடையாளப்படுத்தி அதை படமாக்கல் மூலம் வெளிக்கொண்டு வருதல் மற்றும் அதனை மேம்படுத்துவதற்கான ஆலொசனை களை முன்வைக்கும் நோக்கில் இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வில் முதலாம் நிலைத் தரவு சேகரிப்பு நுட்பமாக கள அவதானம் மற்றும் நேர்காணலில் பொதுமக்கள் மற்றும் கிராமசேவகர்களிடமும் இலக்குக் குழு கலந்துரையாடலானது 7 பேர் கொண்ட குழுவாகவும், இரண்டாம் நிலைத் தரவுகளாகச் சுற்றுலா தொடர்பான ஆண்டறிக்கை, சுற்றுலாத் திணைக்கள அறிக்கை, நிலப் பயன்பாட்டு அறிக்கைகள், வருடாந்த செயலாற்றுகை அறிக்கை, மாவட்ட புள்ளிவிபரக் கையேடு என்பவையும் பயன்படுத்தப்பட்டன. இத்தரவுகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு SWOT பகுப்பாய்வு, இடம்சார் பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் பெறப்பட்டன. குறிப்பாக புதிய சுற்றுலாத் தளங்களின் பலம், பலவீனம், வாய்ப்புக்கள், அச்சுறுத்தல்கள் விபரணங்களாகவும் இடம்சார் பகுப்பாய்வின் நுட்பமான அணுகல்சார் பகுப்பாய்வு மூலம் தங்குமிடத்திற்கான தூரம், Buffer Zone மூலம் போக்குவரத்து தன்மை என்பன விளக்கப்படங்களாகவும் பெறப்பட்டன. இவற்றினை அடிப்படையாக வைத்துக் கொண்டு ஆய்வு பிரதேசத்தில் வளர்ச்சியடைந்த சுற்றுலாத் தளங்களை விடவும் புதிதாக 18 இடங்கள் சுற்றுலாவுக்கான வளவாய்ப்புக்களைக் கொண்டவையாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளன. இடங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளை தலவாக்கலை பிரதேச செயலகம் செயல்படுத்துதல், தற்போது பிரபல்யமாகி வரும் கிராமிய, சூழல்சார் சுற்றுலா வகைகளை அறிமுகப்படுத்துதல், நீர்சார் சாகச விளையாட்டுக்களை மேற்கொள்வதன்
உள்ளூர் மக்களின்
வாழ்வாதாரத் தினையும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும். |
en_US |