dc.description.abstract |
ஒரு நாட்டினது அனைத்து செயற்பாடுகளும் நிலத்தின் தன்மையிலும் பயன்பாட்டிலும் தங்கி யுள்ளன. அந்தவகையில் நிலப்பயன்பாடு என்பது நிலத்தில் மனித நடவடிக்கை எவ்வாறு காணப்படுகிறது என்பதுடன் மனிதன் எவ்வாறு அதனைப் பயன்படுத்துகின்றான் என்ப தாகும். நிலப்பயன்பாட்டு மாற்றம் என்பது ஆகக்குறைந்தது இரண்டு வேறுபட்ட காலப்பகுதிகளில் புவிமேற்பரப்பில் காணப்படும் பல்வேறு நிலப்பயன்பாடுகளின் வேறுபாடுகளை அடையாளம் செய்தலை குறிக்கிறது. இலங்கையின் வடமாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங் களிலும் வவுனியா வடக்கிலும் மீள்குடியேற்றத்தை தொடர்ந்து அபிவிருத்திப்பணிகள் மிக வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. இதன் காரணத்தினால் நிலப்பயன்பாட்டுமாற்றம் நிகழ்கிறது. இலங்கையின் வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பிரதேசசெயலக பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நிலப்பயன்பாட்டில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அடையாளப்படுத்தி மதிப்பிடுதல் அவசியமாக உள்ளது. அந்த வகையில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் நிலப்பயன்பாட்டினை படமாக்குவதுடன் நிலப் பயன்பாட்டு வகைப்பாட்டினை அடையாளம் காணல்இ நிலப்பயன்பாட்டு மாற்றங்களை மதிப்பிடுதல், இரண்டு காலப்பகுதிகளுக்கிடையேயான நிலப்பயன்பாட்டு வகைகளினது மாற்றங்களினை அவதானித்தல் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்திய காரணிகளைக் கண்டறிதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வானது மேற்கொள்ளப் பட்டுள்ளது. இந்த நிலப்பயன்பாட்டு மாற்றப்பகுப்பாய்வினை மேற்கொள்வதற்காக புவியியல் தகவல் ஒழுங்கு நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கான முதனிலைத் தரவுகள் கள அவதானம் மற்றும் நேர்காணல் என்பவற்றின் மூலம் பெறப்பட்டன. இரண்டாம் நிலைத் தரவுகளாக உயர் தெளிதிறன் கொண்ட செய்மதிப்படம், நிலஅளவைத்திணைக்களத்தின் நிலப்பயன்பாடுபட மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலக புள்ளிவிபரத்தரவுகள் போன்றன பயன்படுத்தப்பட்டுள்ளன. பெற்றுக் கொள்ளப்பட்ட தரவுகள் புவியியல் தகவல் ஒழுங்கு நுட்பமுறையினூடாக பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் முடிவுகளாக, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப்பிரிவினது 2011, 2017 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளின் நிலப்பயன்பாட்டுப் படங்கள் உருவாக்கப்பட்டு மூன்று காலத்திற்கும் உரிய நிலப்பயன்பாட்டு படங்கள் ஒப்பீடு செய்யப்பட்டு நிலப்பயன்பாட்டு மாற்றங்கள் கண்டறியப்பட்டன. குறித்தவொரு நிலப்பயன் பாடு இன்னொரு நிலப்பயன்பாடாக மாறியுள்ளது என்பதை கண்டறிய நிலப்பயன்பாட்டு மாற்ற மதிப்பீட்டு அட்டவணை பயன்படுத்தப்பட்டுள்ளது. நிலப்பயன்பாட்டு மாற்ற அட்டவணை மூலம் குறித்தவொரு நிலப்பயன்பாடு எந்தளவு மாற்றமடைந்துள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு அதிகளவிலான மாற்றங்கள் காடுகள், வீட்டுத் தோட்டம், விவசாயநிலம், நீர்நிலைகள், கட்டடங்கள் போன்ற நிலப்பயன்பாட்டு வகை சார்ந்து ஏற்பட்டுள்ளன. சனத்தொகை அதிகரிப்பின் காரணமாக வீட்டுத்தோட்டக் குடியிருப்புக்கள், விவசாயநிலம் அதிகரித்துள்ளதுடன் காடுகள் மற்றும் நீர்நிலைகள் குறைவடைந்துள்ளன. புதுக்குடியிருப்பு பிரதேசசெயலக பிரிவில் 12 வருட காலப்பகுதி களுக்கு இடையில் காடுகளின் அளவே அதிகளவு குறைவடைந்துள்ளது. இந்த நிலப்பயன் பாட்டு மாற்றமானது சனத்தொகை அதிகரிப்பு, விவசாயம், குடியேற்றத்திட்டம் போன்றவற்றால் ஏற்பட்டுள்ளது. இவ்வாறாக அடையாளப்படுத்தப்பட்ட பிரதான பிரச்சனைகளுக்கு தீர்வுகளும் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. விவசாய நிலங்கள் துண்டாடப்படுவதனை குறைத்துக் கொள்ளல், குளங்களை ஆக்கிரமித்து வீதிவலைப் பின்னல்கள் மேற்கொள்வதனை தவிர்த்துக் கொள்ளல், திட்டமிட்ட வகையில் குடியேற்றங் களை அமைத்துக் கொடுத்தல் என்பவையே அவையாகும். எனவே இந்த ஆய்வின் மூலம் பெறப்படும் நிலப்பயன்பாடு மற்றும் நிலப்போர்வை மாற்றம் தொடர்பான தகவல்கள் இடம்சார் ரீதியில் தற்போதைய நிலைமைகளை விளங்கிக்கொள்ளவும் நிலப்பயன்பாட்டுப் பாங்குகள் தொடர்பாக அறிந்து கொள்ளவும் அதன் அடிப்படையில் திட்டங்களை நடைமுறைப் படுத்தவும் திட்டங்களை தீர்மானமெடுத்து அமுல்படுத்தவும் வழிகாட்டியாக அமையும். அத்துடன் நிலப்பயன்பாட்டு திட்டமிடல் நிலப்பயன்பாட்டு பொருத்த மதிப்பீடு போன்ற செயற்பாட்டினை மேற்கொள்ளவும் இந்த ஆய்வு பரிந்துரை செய்கின்றது. |
en_US |