dc.description.abstract |
இலங்கையில் வறுமை ஒழிப்பில் முக்கிய அங்கமாக வகிப்பது சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டம் ஆகும். 2030ம் ஆண்டளவில் இலங்கையினை ஒரு வறுமையற்ற நாடாகக் கொண்டுவருவதே இங்குள்ள அரசின் நோக்கமாகும். அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஹிஜ்ஜிராபுரத்தை அடிப்படையாகக் கொண்டதாக இவ்வாய்வு காணப்படுகின்றது. இவ் ஆய்வானது மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டத்தின் பங்களிப்பினை இணங்காணல், ஹிஜ்ஜிராபுரம் கிராமத்தின் சமுர்த்திக் கொடுப்பனவின் பின்னர் மக்களின் வாழ்க்கைத்தர நிலையினை கண்டறிதல் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளினைப் பகுப்பாய்வு செய்தல் போன்றனவாகும். இவ் ஆய்விற்காக முதலாம் நிலைத் தரவுகள் மற்றும் இரண்டாம் நிலைத்தரவுகள் பெறப்பட்டுள்ளன. முதலாம் நிலைத்தரவுகளாக நேர்காணல், வினாக்கொத்து, இலக்குகுழுகலந்துரையாடல், நேரடி அவதானிப்பு போன்றனவற்றின் மூலம் தரவுகள் பெறப்பட்டுள்ளன. இரண்டாம் நிலைத்தரவுகளாக சமுர்த்தி செயலாற்று அறிக்கைகள், மாவட்ட புள்ளிவிபரவியல் கையேடுகள், கிராமசேவகர் அறிக்கைகள், சமுர்த்தி வங்கி அறிக்கைகள் மூலமும் தரவுகள் பெறப்பட்டுள்ளன. இங்கு பெறப்பட்டுள்ள தரவுகளினைக் கொண்டு விபரணப் பகுப்பாய்வு மற்றும் பண்பு சார் பகுப்பாய்வினை பயன்படுத்தி MS Excel மூலம் முடிவுகள் பெறப்பட்டுள்ளதுடன் அட்டவணைகளாகவும் வரைபடங்களாகவும் முடிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. சமுர்த்திக் கொடுப்பனவானது மக்களுக்கு காலதாமதமாக கொடுக்கப்படுகின்றது, குடும்ப அங்கத்தவர்கள் அதிகமாக உள்ளமையினால் கொடுப்பனவுகளின் அளவு போதாமையாக உள்ளமை, தொழில் முயற்சிகளினை மேற்கொள்ளுவதற்கு மூலப்பொருள் பற்றாக்குறையாகக் காணப்படுகின்றமை, சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களினை மக்கள் சரியான முறையில் மீளச்செலுத்த முடியாமல் காணப்படுகின்றமை, மக்களுக்கு சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டம் பற்றி போதிய தெளிவூட்டல் இன்மை போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவ்வாறு காணப்படும் பிரச்சினைகளினை தீர்த்துக்கொள்வதற்காக மக்களுக்கு உரிய காலத்தில் கொடுப்பனவுகள் கொடுக்கப்படுவதுடன் மக்களுக்கு நிகழ்ச்சித்திட்டம் பற்றி தெளிவூட்டுதல், கடன்களினை மீளசெலுத்துவதற்கான கால அவகாசத்தினை கூட்டுவதன் மூலம் மக்களின் பிரச்சினைகளினை ஓரளவிற்குக் குறைத்துக் கொள்ள முடியும் போன்ற பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. |
en_US |